For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகள் தினம் கோலாகலம் – கலை நிகழ்ச்சிகளுடன் களை கட்டியது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பாட்டுப்பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். அவர்கள் விறுப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதாலேயே இறைவனுக்கு சமமாக ஒப்பிடப்படுகின்றனர். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 20ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14 ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

இயற்கையிலேயே குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர் பண்டித ஜவகர்லால் நேரு. அதன் காரணமாக அவரை நேரு மாமா என்று அனைவரும் அன்போடு அழைத்தனர். குழந்தைகள் மீது கொண்ட அளவுகடந்த பாசம் காரணமாகவே தனது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுமாறு வலியுறுத்தினார் நேரு. இந்த தினத்தில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதிநிலை குறித்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்

ஆனால் குழந்தைகள் தினம் என்றால் என்பதையே அறியாமல் பல குழந்தைகள் உள்ளனர். இன்றும் பள்ளிக்கு செல்லாமல் தங்களின் உரிமைகளைப் பற்றி அறியாமல் எண்ணற்ற குழந்தைகள் வசித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், பாலியல் கொடுமை குற்றங்கள், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு மட்டும், இத்தகைய வழக்குகள், 810 பதிவாகியுள்ளன. இது, அதற்கு முந்தைய, 2009ம் ஆண்டை விட, 27.8 சதவீதம் (634) அதிகம்.

குழந்தைகளுக்கு எதிராக; சிசுக் கொலை, குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பாலியல் கொடுமை, கடத்தல், கொலை என, பல வகையான குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் குழந்தைகள் கற்பழிப்பு, பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டு நடந்துள்ள, 203 சம்பவங்களில், அதிகப்படியாக, சென்னை மாநகரில், 22 வழக்குகளும், அடுத்ததாக, சேலத்தில், 19 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்தாண்டில் நடந்த குழந்தைகளுக்கெதிரான குற்ற சம்பவங்களில், 1,029 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 613 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 129 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதான வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவற்றை தடுக்க, கடுமையான சட்டங்கள், தண்டனைகள் இருந்தாலும், குடும்பப் பிரச்னைகள் போன்ற சமூக போக்கு மாற்றங்களால், இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுக்கெதிரான குற்றங்களின் விளைவு பற்றியும் பெற்றோர் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதான் உண்மையான குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.

English summary
Universally, Children’s Day is celebrated on 20th November. November 20 was chosen as it marks the anniversary of the day in 1959 when a Declaration of the Rights of the Child was adopted by the UN Assembly. However, in India, Children’s Day is celebrated on 14th November, because the date marks the birthday of the country’s first Prime Minister Pandit Jawaharlal Nehru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X