For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணின் வளர்ச்சியை தடுக்கும் பெண் அதிகாரிகள்

Google Oneindia Tamil News

Women in office
உயர்பதவியில் இருக்கும் பெண்கள் தங்களுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களுக்கு சலுகைகள் தருவதற்கு விரும்புவதில்லை என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் தனக்கு போட்டியாக அந்தப் பெண் வந்து விடுவாரோ என்ற எச்சரிக்கை உணர்வுதான் என்கிறது அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்று.

அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சின்சினாட்டியில் உளவியல் துறையில் பணிபுரியும் டேவிட் மவுமி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண் உயரதிகாரிகள், தனக்கு கீழ்பணியாற்றும் பணியாற்றும் ஊழியர்களிடம் எவ்வாறு நடந்த கொள்கிறார்கள் என்பது குறித்து அமெரிக்காவில் பணிபுரியும் 2000 ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன்படி வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின் விபரம்.

பெண்களே முன்னிலை

மிகப்பெரிய நிறுவனங்களில் உயரதிகாரிகளாக பணிபுரிபவர்களில் ஆண்களை விட பெண்களே அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறையும் ஆர்வமும் எடுத்துக்கொள்கின்றனர்.

சிறந்த மேலாளர்களை உருவாக்குவதில் ஆண் உயரதிகாரிகளை விட பெண் உயரதிகாரிகளே அதிக கவனம் செலுத்துகின்றனர்.

தனக்குக்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் திறமையை அங்கீகரித்து ஊக்குவிப்பதில் பெண்கள் சிறந்த விளங்குகின்றனர். அவர்கள் ஆண் ஊழியர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்குகின்றனர்.

பெண்ணுக்கு எதிரியா ?

ஆணால், பெண் அதிகாரிகள் மற்ற பெண் ஊழியர்களை முன்னுக்கு கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆணுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.

தனக்குப் போட்டியாக பெண் ஊழியர்கள் வந்துவிடுவார்களோ என்ற எச்சரிக்கை உணர்வே இதற்குக் காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் பெண் ஊழியர்களை ஊக்குவித்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஆண் அதிகாரிகள் முன்னிலை வகிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு அமெரிக்காவில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட முடிவுதான்.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண் உயர் அதிகாரிகள் சக பெண் ஊழியர்களிடம் குடும்பப் பாசத்தோடுதான் பழகி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

English summary
It may not be true always, but a study says that female bosses in a male-dominated environment can wreck other women's promotion hopes. Instead, women managers who do break through the glass ceiling are more likely to mentor and support their male colleagues than their female co-workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X