For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வினை தீர்க்கும் வெள்ளெருக்கு விநாயகர்

Google Oneindia Tamil News

வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெய்வீகச் செடி

புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என சங்ககால நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம். வெள்ளெருக்கு வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர்.

வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. “வேதாளம் பாயுமே வெள்ளருக்கு பூக்குமே" என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். ஆனால், தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.

வெள்ளெருக்கு விநாயகர்

வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் செய்ய வேண்டும்.

வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை கடைப்பிடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நல்லதும், தீயதும் இல்லாத எருக்கம் பூ விநாயகருக்கு விருப்பமானது. அதுபோல வெள்ளெருக்கம் பூ சிவனுக்கும் விருப்பமானது என்று தேவார திருவாசகங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

English summary
The Ganesa idols made from the root of "vellerukku" is said to be having divine powers. People worship the vellurukku Vinayagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X