For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லட்சுமி தாண்டவம் ஆடும் இல்லம்

By Chakra
Google Oneindia Tamil News

Lamp
வீட்டில் எத்தனை வளங்கள் இருந்தாலும் செல்வம் பெருக வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இல்லத்தில் செல்வம் பெருக அன்னை மகாலட்சுமியின் அருள் வேண்டும்.

இறையருள் உள்ள வீட்டில் நிச்சயம் பொன்மழை பொழியும். லட்சுமி தாண்டவம் நடக்கும். ஏழைப்பெண் ஒருத்தி இட்ட உலர்ந்த நெல்லிக்கனியை அவளுடைய பக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடினார்.

அவள் வீட்டில் பொன்மழை பொழிந்தது. காஞ்சியில் ஒரு சமயம் காமாட்சி தேவி பொன்மழை பொழிந்ததாக மூக சங்கரர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்..

வீட்டில் தினமும் கனகதாராஸ்தோத்திரம் பாராயணம் செய்தால் பொன்மழை பொழியும் லட்சுமி நடனம் புரிவாள்.

விளக்கில் வசிக்கும் லட்சுமி

வீட்டில் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றும் போது எத்தனை முகங்கள் ஏற்றவேண்டும் என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு.

ஒருமுகம் ஏற்றினால் மத்திம பலனைத்தரும். இரண்டு முகம் ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மூன்று முகம் ஏற்றினால் புத்திர சுகத்தை கொடுக்கும். நான்கு முகம் ஏற்றினால் மாடு, கன்று என்று கால்நடைச் செல்வம் பெருகும்.

ஐந்துமுகம் ஏற்றினால் எட்டுவிதமான செல்வச்செழிப்பும் பெருகும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது என்கின்றன சாஸ்திரங்கள்.

பணக்கஷ்டம் தீர தேவாரம்

தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு பணம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் இடையே உள்ள ஸ்தலங்களில் ஒன்றான திருவாடுதுறை சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு பொற்கிழி அளித்த தலம் ஆகும். திருவாடுதுறை சென்று கோமுக்தீஸ்வரரை முறைப்படி வணங்குங்கள் செல்வம் சேரும். சிதம்பரம் நடராஜரை தரிசியுங்கள், தேவாரத்தை வீட்டில் பாராயணம் செய்யுங்கள் செல்வம் பெருகும்.

பிள்ளையார் சக்தியோடு உள்ள சிற்பங்களுல் சில வித்யாசமான சிற்பங்களும் கோவில்களில் இருப்பதை பார்த்திருப்பீர்கள், வெற்றியிலும், செல்வத்திலும் செழித்து நின்ற மூன்றாம் குலோத்துங்க சோழன் போன்ற மன்னர்கள் கட்டிய ஆலயங்களில் கட்டாயம் இந்த சிலைகள் இருக்கும்.

சக்தித் தலங்களிலும் உள்ள சக்தியுடன் உள்ள கணபதியை வழிபட்டால் வெற்றிகள் குவியும், செல்வம் செழிக்கும்.உச்சிஷ்டகணபதி என்றும் போக கணபதி என்றும் சொல்பவர்கள் உண்டு. கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள போககணபதியை வணங்கினால் எல்லாவகையான செல்வங்களும் சேரும்.

வெள்ளிக்கிழமை ராகுகாலபூஜை

15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

English summary
Lakshmi is the Goddess of wealth and prosperity, both material and spiritual. The word ''Lakshmi'' is derived from the Sanskrit word Laksme, meaning "goal." Lakshmi, therefore, represents the goal of life, which includes worldly as well as spiritual prosperity. In Hindu mythology, Goddess Lakshmi, also called Shri, is the divine spouse of Lord Vishnu and provides Him with wealth for the maintenance and preservation of the creation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X