For Daily Alerts
Just In
நாடகமாகும் எழுத்தாளர் பாமாவின் சிறுகதை !
மதுரை: எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில் சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை , பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் உள்ள ஸ்பெசஸ்-ல் ஜூன் 25 மற்றும் 26 ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணி அளவில் எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில் நடைபெற உள்ளது.
பாடல்களை இன்குலாப் எழுதியுள்ளார். பின்னணி இசையை சித்திரை சேனமும், இசையை சாரதி கிருஷ்ணனும், கவின் மலரும் அமைத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், அ. அமுதா, ஏஞ்சல் கிளாடி, பிரம்மா, ஜீவா ரகுநாத், கவின் மலர், லிவிங் ஸ்மைல் வித்யா , நளினி ஜமீலா , பூங்குழலி , சக்தி சரவணன் , செந்தில் குமார், சாரதி கிருஷ்ணன் , செந்தில் குமார் , சௌமியா , சுரேந்தர் , தமிழ் அரசன் , தாயம்மா ரம்யா, எஸ்.உஷா ஆகியோர் இதில் பங்கு பெறுகின்றனர்.
இதற்கான தயாரிப்பு மேலாண்மை & விளம்பரங்கள் வடிவமைப்பை சுரேந்தர் செய்துள்ளார்.