For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரா, ராமா, சந்திரா: வண்டலூர் பூங்கா வெள்ளைப் புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய ஜெயலலிதா

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வண்டலூர் விலங்கியல் பூங்காவில் பிறந்துள்ள 2 வெள்ளை நிற புலிக்குட்டிகளுக்கும், 1 சிங்கக் குட்டிக்கும் வீரா, ராமா, சந்திரா என்று முதல்வர் ஜெயலலிதா இன்று பெயர் சூட்டினார்.

வண்டலூர் விலங்கியல் பூங்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அனு என்ற வெள்ளைப் புலி ஒரு ஆண், ஒரு பெண் குட்டியை ஈன்றது. கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி கவிதா என்ற சிங்கம் ஒரு சிங்கக் குட்டியை ஈன்றது. அந்த குட்டிகளுக்கு தமிழ் பெயர்கள் வைப்பது என்று பூங்கா அதிகாரிகள் முடிவு செய்தனர். பூங்காவில் உள்ள மிருகங்களுக்கு தமிழ் பெயர் வைக்கும் திட்டத்தை பூங்கா அதிகாரிகள் கடந்த 2010-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினர்.

இதையடு்தது 2 புலிக்குட்டுகளுக்கும், 1 சிங்கக் குட்டிக்கும் பெயர் வைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவை பூங்கா அதிகாரிகள் அணுகினர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் சிங்கக் குட்டிக்கு வீரா என்றும், ஆண் புலிக்குட்டிக்கு ராமா என்றும், பெண் புலிக்குட்டிக்கு சந்திரா என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் ஒரு ஆண் மற்றும் 2 பெண் புலிக்குட்டிகளுக்கு செம்பியன், இந்திரா, வள்ளி என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.

ராமா மற்றும் சந்திராவின் பெற்றோர் பீஷ்மா(9), அனு (8). அந்த 2 இரண்டு புலிகளை டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் இருந்து கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி வண்டலூர் விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு வந்தனர்.

3-3-2009 அன்று தான் அனு முதன்முதலாக 3 குட்டிகளை ஈன்றது. ஒரு வாரம் கழித்து 3-ல் ஒரு குட்டி இறந்தது. இதையடுத்து அந்த 2 பெண் புலிக் குட்டிகளுக்கு ஆகான்ஷா, அம்ருதா என்று பெயரிடப்பட்டது. 15 மாதங்கள் கழித்து மறுபடியும் 2 குட்டிகளை ஈனறது அனு.

English summary
3 white tiger cubs were born on august 5 in Vandalur Zoo. Zoo officials have approached CM Jayalalithaa to give tamil names to the cubs. They are yet to receive response from the CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X