For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நாணயங்களை உருக்கினால் இனி 7 ஆண்டு தண்டனை!

Google Oneindia Tamil News

Indian Rupees Coin
டெல்லி: ரூபாய் நாணயங்களை உருக்கினாலோ அல்லது அழித்தாலோ, அதற்கான கடுங்காவல் ஜெயில் தண்டனையை 7 ஆண்டுகள் வரை அதிகரிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்த இந்த 'நாணயங்கள் தயாரித்தல் 2009' என்ற சட்ட மசோதா விவாதம் எதுவும் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது அமலில் உள்ள 4 சட்டங்களை உள்ளடக்கியதாக இந்த புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நாணயங்களை உருக்குதல் மற்றும் அழித்தல் ஆகிய குற்றங்களுக்கு கள்ள நாணயம் தயாரிப்பு குற்றம் போன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கும்படி பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்து இருந்தது.

ஆனால் அதை ஏற்க மறுத்து 7 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 'நாணயம்' என்ற வார்த்தையின் விளக்கம், தற்போது கிட்டத்தட்ட புழக்கத்தில் இல்லாத ஒரு ரூபாய் நோட்டுக்கும் பொருந்தும் என்றும், இந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
The Lok Sabha on Friday passed the bill making melting or destruction of currency coins punishable by a maximum jail term of seven years. The Coinage Bill, first introduced in the house in December 2009, was given the nod without a discussion after Finance Minister Pranab Mukherjee moved it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X