For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்கள் ரீல் ஹீரோக்கள், போலீஸ்தான் ரியல் ஹீரோ-அர்ஜூன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

'B Force' celebrates its 4th anniversary
சென்னை: காவல்துறையினர்தான் நிஜ ஹீரோக்கள், சினிமாவில் காக்கிச்சட்டையை அணியும் எங்களைப்போன்றவர்கள் எல்லாம் ரீல் ஹீரோதான் என்று நெகிழ்ச்சியுடன் காவல்துறையினருக்கு புகழாரம் சூட்டினார் நடிகர் அர்ஜூன். சென்னையில் பி ஃபோர்ஸ் என்ற சமூக அறக்கட்டளையின் நான்காவது ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய அர்ஜூன் இவ்வாறு கூறினார்.

ஃபோர்ஸ் சில நினைவுகள்

காவல்துறையினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ உதவி மற்றும் புற்று மேலாண்மை சேவைகளை வழங்குவதற்காக சேவை நோக்கத்தோடு தொடங்கப்பட்ட அமைப்பே பி ஃபோர்ஸ். தமிழ்நாட்டின் குற்றம் மற்றும் புலனாய்வுத்துறையின் டிஜிபியாக பணியாற்றிய மோகன்தாஸின் நான்கு புதல்விகளான பிந்து, பீனா, பிஜூ மற்று பிருந்தா ஆகியோரால் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. இந்த அமைப்பானது கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற மருத்துவ உதவிகளை செய்துவருகிறது. இதில் 250 முதல் 300 கொடையாளிகள் வரை இணைந்து சேவை நோக்கத்தோடு வலிமையுடன் செயல்புரிந்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு மிக்க பி ஃபோர்ஸ். அறக்கட்டளையின் நான்காவது ஆண்டுவிழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. விழாவின் முதன்மை விருந்தினராக தமிழ்நாடு டிஜிபி ராமானுஜம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காவல்துறையில் சிறப்பு மிக்க சேவைகளை செய்த மோகன்தாஸின் பணிகளை அவர் நினைவு கூர்ந்தார்.

கவுரவ விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகர் அர்ஜூன், காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசையை திரைப்படங்களின் மூலம் நிறைவேற்றிக்கொள்வதாக தெரிவித்தார். என்னதான் காக்கிச்சட்டை அணிந்து நடித்தாலும் நாங்கள் ரீல் ஹீரோதான் என்றார் அர்ஜூன்.

ஆண்டுவிழாவை ஒட்டி தமிழ்நாடு முன்னாள் டிஜிபி வால்டர் ஐ. தேவாரத்திற்கு 'மோகன்தாஸ் நினைவு விருது" வழங்கப்பட்டது. விருதுதினை பெற்றுக்கொண்டு ஏற்புரை நிகழ்த்திய தேவாரம், மோகன்தாஸுடன் இணைந்து பணியாற்றிய காலத்தை நினைவு கூர்ந்தார்.

பி ஃபோர்ஸ் நான்காம் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக நெதர்லாந்து நாட்டின் கௌரவ தூதர் அகிலா ஸ்ரீனிவாசன் பங்கேற்று அறக்கட்டளையின் பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவில் பி ஃபோர்ஸ் அறக்கட்டளையின் சிறந்த கொடையாளிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

English summary
B-Force is a non-profit, non-political and non-sectarian organization that was started in 2007. The organization was launched as a tribute to the former DGP of Chennai, Late K Mohandas and his wife, Late Santha Mohandas. Service and compassion…were the two ideals they held close to their heart and hence became the driving force behind shaping of this organization. B Force is registered as a trust and aims to provide and facilitate the police force, and their families in the areas of health, education and employment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X