For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை பிஷப் கால்டுவெல் நினைவு இல்ல திறப்பு விழா : முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Caldwell
திசையன்விளை: இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் நினைவு இல்ல திறப்பு விழா நாளை ( 17ம் தேதி) நடக்கிறது. முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பிரன்சி்ங் மூலம் திறந்து வைக்கிறார்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பிஷப் கால்டுவெல். இவர் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக இந்தியா வந்தார். தமிழகத்தில் நெல்லை மாவட்டம் இடையன்குடியி்ல் தங்கி இருந்தார். அப்போது தமிழ் கற்றுக் கொண்டார். தமிழின் மீது பற்று கொண்டார். தமிழில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தமிழுக்கு ஒப்பிலக்கணம் எழுதியவர் என்ற சிறப்புக்கு உரியவர் பிஷப் கால்டுவெல். நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த இடையன்குடியில் தூய திரித்துவ ஆலயத்தை கட்டி அங்கேயே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கழித்தார்.

பிஷப் கால்டுவல் தமிழ் மொழி குறித்து ஆய்வு நடத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு ஆகியவை தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறியவர். அவைகளுக்கு திராவிட மொழிகள் என்று பெயரிட்டவரும் கால்டுவெல் தான்.

இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக ஆக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி அந்த வீ்ட்டை புதுப்பிக்க தமிழக அரசு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கியது. வீட்டை சுற்றி சுவர், வீ்ட்டின் முன்பு மார்பளவு சிலை, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துள்ளன. இப்போது பிஷப் கால்டுவெல் நினைவு இல்லம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் மாவட்ட கலெக்டர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீ்ட்டின் முன்பு இருந்து மெயின் ரோடு வரை சிமிண்ட் சாலை உள்ளிட்ட பணிகள் நடந்துள்ளன.

நாளை தமிழக முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பிரன்சிங் மூலம் சிலையை திறத்து வைக்கிறார்.

இந்நிலையில் பிஷப் ராபர்ட் கார்டுவெல்லுக்கு புதிய நினைவு மண்டபம் கட்டியுள்ள தமிழக முதல்வர் கருணாநிதியை பாராட்டி இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்லைக்கழக மொழியியல் பேராசிரியர் ஆர்.சி.ஆஷெர் கடிதம் எழுதியுள்ளார்.

English summary
Bishop Robert Caldwell's house in Tirunelveli district is now a memorial. Bishop Caldwell came to TN to spread christianity. He settled in Tirunelveli district and did research in Tamil. It is he who told that tamil, telugu, kannada, malayalam and tulu belong to a separate family and called it dravidian languages. TN CM Karunanidhi is opening this memorial tomorrow through video conferencing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X