For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அல்-கோபர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு இரத்ததான விருது

By Chakra
Google Oneindia Tamil News

சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் மற்றும் அல்-கோபர் பகுதிகளில் ரத்ததான முகாம்களை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்திற்கு ரத்தான விருது கிடைத்துள்ளது.

சவூதிஅரேபியா கிழக்கு மாகாணம் அல்-கோபர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த வருட ஹஜ் மாதத்தின் போது ஹஜ் பயனிகளுக்காக இரு இரத்ததான முகாம்களை நடத்தியது. மேலும் அவ்வப்போது அவசரத் தேவைகளுக்காக தம்மாம் மற்றும் அல்-கோபர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலும் இரத்ததானம் செய்து உயிர் காக்க உதவி வருகிறது. இதனை பாராட்டும் முகமாக அல்-கோபர் கிங் ஃபஹத் மருத்துவமனை தலைமை நிர்வாகிகள் கடந்த 14-6-2011 அன்று நடந்த மருத்துவமனை விழாவில் அல்-கோபர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காவும், மீனவ சமுதாயத்திற்காகவும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் தாயான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மார்கப் பணி, மற்றும் சமுதாய பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, 24 மணிநேர ஆம்புலன்ஸ் மற்றும் இரத்தான சேவை போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu Musilim Munnetra kalagam, Al - Khobar branch, Saudi Arabia got Blood donation award in Al Khobar king bhahath hospital on June 14th 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X