For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்சஸ் : 9ல் இரண்டாம் கட்ட பணி துவக்கம், 28ல் நிறைவு

By Siva
Google Oneindia Tamil News

நெல்லை: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2-ம் கட்டமாக வரும் 9-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை தொடர்ந்து 20 நாட்கள் நடக்கிறது. இதில் வீடற்ற நபர்களை கணக்கெடுக்கும் பணி 28-ம் தேதி நடக்கும். கணக்கெடுப்பு நாட்களில் ஏற்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு மாற்றங்கள் மார்ச் மாதம் 1 முதல் 5-ம் தேதி வரை மீண்டும் சரிபார்க்கப்படும்.

இந்த கணக்கெடு்ப்பு பணியின்போது 29 கேள்விகள் கேட்கப்படும். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சரியான விபரங்களை தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர் குடும்ப தலைவரின் பெயர், குடும்ப தலைவரின் உறவு முறை, இனம், பிறந்த தேதி, வயது, தற்போதைய திருமண நிலை, திருமணத்தின் போது வயது, மதம், ஷெட்யூல்டு வகுப்பு, ஷெட்யூல்டு பழங்குடி, மாற்று திறனாளிகள் உள்பட 29 கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Second phase of census will be done from february 9 to 28. People are asked to give proper details to the officials. The revisional round will be done from march 1to 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X