For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு்க்குப் பொருத்தமானதாகும்-மதுரை ஆதீனம்

Google Oneindia Tamil News

Madurai Adheenam
மதுரை: சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் எல்லாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாகும். இந் நாளில்தான் ஆதீனங்களிலும், திருமடாலயங்களிலும், பூஜைகள், வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். மேலும் இந்த இடங்களில் அன்றுதான் பஞ்சாங்கம் வாசித்து காட்டுவதும் மரபாக இருந்து வருகிறது.

அதில் நாட்டின் நிலை குறித்த பல்வேறு செய்திகள் வானிலை, பூமி தொடர்பான தகவல்கள், விவசாயம், அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் போன்றவை விரிவாக எடுத்துரைக்கப்படும். எனவே சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுக்கு பொருத்தமான நாளாகும் என்று அவர் கூறியுள்ளார்..

English summary
Madurai Adheenam has said that Chithirai first day is the Tamil new year. He said in a statement that, Tamil all over the world are celebrating Chithirai first day as Tamil new year for last many decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X