For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றாலம் சாரல் விழா-தயாராகும் மாவட்ட நிர்வாகம்

Google Oneindia Tamil News

Courtallam Falls
குற்றாலம்: குற்றாலம் சாரல் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அரசு துறை அதிகாரிகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை நடத்தினார். ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் சாரல் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அருவிகளில் குளிப்பது, ஆயில் மஜாஜ், படகு சவாரி என குற்றால சீசன் என்றாலே குதூகலகமாக இருக்கும். குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்விக்க ஆண்டுதோறும் சுற்றுலா துறை சார்பில் சாரல் திருவிழா ஒரு வாரம் நடத்தப்படுவது வழக்கம். இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் நடராஜன் ஆலோசனை நடத்தினார்.

சாரல் திருவிழா ஏற்பாடுகளை கவனிக்க மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதி தலைமையில் சுற்றுலா துறையினர், செய்தி மக்கள் தொடர்புதுறை, பேரூராட்சி துறை, கலை பண்பாட்டு துறை ஆகியோர் அடங்கிய குழு அமைக்க கலெக்டர் உத்தரவி்ட்டார். விழாவில் பங்கேற்க அமைச்சர்கள் ஒப்புதல் பெற்று ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் ஒரு வாரம் சாரல் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

சாரல் திருவிழாவில் நாய் கண்காட்சி, பேஷன் ஷோ, படகு போட்டி, ஆணழகன் போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

English summary
The annual cultural festival of “Saaral Thiruvizhaa” conduct at Courtallam during the season every year. This year the festival will be celebrated on July end or August first week. Nellai district collector Natarajan discussed with the officials about the arrangements. The saaral thiruvizhaa will be held for one week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X