For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாடுகளில் தீபாவளி

Google Oneindia Tamil News

Abroad
தீபாவளி என்றால் தமிழகத்தில் மட்டும் அல்லது இந்தியாவில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகை அல்ல. உலக அளவில் பல நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், பண்டைய காலங்களில் இந்தியாவிற்கு பல நாடுகளோடு வணிக தொடர்பு இருந்ததாக கூட இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் வெளிநாடுகள் பலவற்றிலும் இந்தியாவில் கொண்டாடுவது போல பெரிய அளவில் கொண்டாடுவதில்லை.

எடுத்துகாட்டாக, இந்தியாவின் பக்கத்து நாடுகளான நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள், ஏன் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் கூட சில இடங்களில் தீபாவளியை மக்கள் கொண்டாடுகின்றனர். இந்தியாவில் இருந்து மிக தொலைவில் இருக்கும் நாடுகளான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு தீபாவளிக்காக தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பெர்க்கில் தீபாவளி கொண்டாடத்திற்காக, பாரம்பரிய நாட்டியம், பாட்டு, உடை அலங்காரம் என கலகலப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்குள்ள இந்து மகா சபை செய்துள்ளது. இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் தென் ஆப்ரிக்காவில் ஆண்டுதோறும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, இந்தோனியா நேபாளம் போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவின் சிக்கிம், டார்ஜிலிங், அசாம் ஆகிய பகுதியில் பொதுவாக ஒரே மாதிரியான தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த கொண்டாட்டம், தமிழக முறையில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட முறையில் கொண்டாடப்படுகிறது.

தாசைன் என்ற பெயரில் தீபாவளியை கொண்டாடும் இந்த மக்களில் ஏழை, பணக்காரர் வேறுபாடு பார்ப்பதில்லை. அரிசி, குங்குமம், கயிறு ஆகியவற்றை ஒன்றாக, கோவில் முன் வைத்து, ஊர் பெரியவர்கள் முதல், ஒரு வீட்டு பெரியவர்கள் வரை வணங்குவர். பின் அங்கேயே ஒரு விருந்து வைத்து சமைத்து குடும்பம் குடும்பமாக சாப்பிட்டு மகிழ்வர். இந்த பண்டிகையின் போது, பல ஊர் விளையாட்டுகளும் நடத்தப்படும்.

வங்காள தேசம், நேபாளம், இலங்கை நாடுகளில் தசரா பண்டிகையும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்களால் கொண்டாடப்படும் தீபாவளி நிகழ்ச்சிகளில், அந்நாட்டு மக்களும் அதிகளவில் கலந்து கொள்வது வழக்கம். இந்தாண்டும் தீபாவளி பண்டிகையை விமர்சியாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கடந்தாண்டு பல சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்ல உலகமெங்கும் வசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் தீபாவளி கொண்டாட்டம் என்பது மறக்க முடியாத நிகழ்வுகளை தாக்கி உள்ளது. பல இடங்களில் இந்திய சங்கங்கள், குழுக்கள் இணைந்து கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில், தமிழகத்தில் நாம் ஆண்டுதோறும் தீபாவளியை கொண்டாடும் போதும், உலக நாடுகள் பலவற்றிலும் இதன் எதிரொலி நிகழ்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

English summary
Thousands are expected to attend a ‘festival of light’ to mark the start of the Dashehra and Diwali in Fallowfield, Manchester will feature a lantern parade, fireworks, live music, dancing and puppet shows. The festivals are also celebrated by the Sikh and Jain communities and the event is open to all. Downtown Auckland faces a rash of road closures throughout this weekend - including part of Queen St - as the colourful Indian Diwali Festival. Hindus in India, Burma, Sri Lanka, and Indonesia including other nation around the globe celebrate Dashain in their own ways. Dashain is common festival of poor and rich.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X