For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுமையில் தியாகி விஸ்வநாத தாஸ் குடும்பம்-அரசு வேலை கோரும் வாரிசுகள்

Google Oneindia Tamil News

மதுரை: சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் குடும்ப வாரிசுகள் அரசு வேலை கேட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கோரிக்கை மனு அளி்த்தனர்.

சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து நாடகம் நடத்தி மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர் தியாகி விஸ்வநாத தாஸ் . சுதந்திரத்திற்காக வீரமுடன் போராடியதால் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

இத்தகைய தியாகி விஸ்வநாததாசின் 125 வது பிறந்த தினவிழா மதுரை திருமங்கலத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ கலந்து கொண்டு வீரத்தியாகி விஸ்வநாததாசின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் மதுரை கலெக்டர் சகாயம், திருமங்கலம் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது , தியாகி விஸ்வநாததாசின் வாரிசுகள் தாங்கள் வறுமையால் வாடுவதாகவும் தங்களுக்கு ஏதாவது ஒரு அரசு வேலை தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை மனு அளி்த்தனர்.

அதைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

English summary
Freedom fighter Viswanatha Doss 125th birth anniversary celebrated in Tirumangalam. In that time Viswanatha Doss Family members gave a Petition to Tamil Nadu Co-Operative Minister Cellur K. Raju for government job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X