For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைத்தியம் பார்க்கப்போய் நோயுடன் திரும்பும் இந்தியர்கள்: ஆய்வு

By Siva
Google Oneindia Tamil News

Indian Hospitals
டெல்லி: இந்திய மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பொது வார்டுகளில் நோய் தொற்று அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

குளோபல் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் பார்ட்னர்ஷிப் (ஜிஏஆர்பி) மற்றும் சென்டர் பார் டிசீஸ் டைனிமி்க்ஸ், எகனாமிக்ஸ் அன்ட் பாலிசி(சிடிடிஇபி) சேர்ந்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் இந்திய மருத்துவமனைகளில் உள்ள ஐசியு அறைகளில் வான்கோமைசின் ரெசிஸ்டன்ட் என்டரோகாக்கஸ் என்னும் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த நோய் தொற்று மிகக் கொடியது.

உலக மருத்துவமனைகளை ஒப்பிடுகையில் இந்திய மருத்துவமனைகளில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு 5 சதவீதம் அதிகம். இந்த தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. இது தான் மருத்துவமனைகளில் அதிகரி்த்து வரும் பிரச்சனையாகும்.

இந்த நோய் தொற்று ஏற்பட்டால் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும்; வைத்தியத்திற்கு அதிக செலவு ஆகும்; ஏன் மரணமே நேரும்.

ஆனால் இந்த பிரச்சனை தவிர்க்கக்கூடியது தான் என்று கூறப்படுகிறது.

English summary
ICUs and general wards in Indian hospitals have a high burden of infections. This hospital acquired infections lead to longer hospital stays, increased treatment cost and even death in some cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X