For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காடு வளர்ப்பில் இந்தியா சாதனை-ஆண்டுக்கு 3 லட்சம் ஹெக்டேர் காடுகள் அதிகரிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

நியூயார்க்: காடுவளர்ப்பில் ஆசியா உலகிலேயே முன்னணியில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஆண்டுக்கு 3 லட்சம் ஹெக்டேர் காடுகள் அதிகரித்துக் கொண்டே போவதாக ஐ.நா., உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் வனப் பிரிவு இயக்குநர் எடுவர்டோ ரோஜாஸ் பிரையல்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசியா, உலக அளவில் காடு வளர்ப்பில் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாக உள்ளது. அதிலும் இந்தியாவில் ஆண்டுக்கு 3 லட்சம் ஹெக்டேர் காடுகள் என்ற வீதத்தில் வளர்ச்சி காணப்படுகிறது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் அதே நிலையில், காடு வளர்ப்பும் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மியான்மர் ஆகிய நாடுகளில்தான் பெருமளவிலான வனப் பகுதிகள் உள்ளன. ஆசிய அளவில் உள்ள காடுகளின் எண்ணிக்கையில், இந்த நாடுகளின் பங்கு மட்டும் 74 சதவீதமாகும். ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் காடு அழிவு என்பது கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்றார் அவர்.

English summary
Asia is leading the afforestation activity in the world with a significant contribution from India which is adding 300,000 hectares of forest every year, a senior UN official said. "I would highlight India, which still has important population growth. The forests in India are growing at 300,000 hectare per annum," Eduardo Rojas-Briales, Forestry Director of Food and Agriculture Organisation told. Five countries -- India, China, Australia, Indonesia and Myanmar- had the largest forested area in Asia and Pacific region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X