• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குவைத்தில் சமூகத் தீமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி- பகுதி 2: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு

By Siva
|

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் சமூகத் தீமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி- பகுதி 2 வரும் 13ம் தேதி இரவு 7 மணிக்கு அப்துல்லாஹ் அல் மஹ்ரீ பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக "அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்" கொள்கை அடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சமய, சமூக, சமுதாய மற்றும் கல்வி என பல துறைகளில் சேவை செய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 2-ம் தேதி குவைத், ஃபஹாஹீல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வரும் 13ம் தேதி இரவு 7 மணிக்கு குவைத் ஸால்மியா பகுதியில் "சமூகத் தீமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - பகுதி 2" நிகழ்ச்சிக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் மவ்லவி அஷ்ஷைக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமை வகிக்கிறார். சங்கத்தின் துணை தலைவர்கள் மவ்லவி ஏ. ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ மற்றும் ஜமாஅத்துல் உலமா குழுவைச் சேர்ந்த மவ்லவி எம். எஸ். அப்துல் குத்தூஸ் ஹஸனீ ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள் குவைத்தில் வாழும் தங்கள் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி குறித்து கூறி அதில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
K-tic has arranged for "Samooga Theemaigal Vilippunarvu programme-part 2" on october 13. The programme starts at 7 pm and will continue after isha prayer. Tamils living in Kuwait are invited. For more details visit www.k-tic.com.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more