For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறைவனுக்கும் ராம பக்தனுக்கும் உள்ள அதிசய ஒற்றுமைகள்

Google Oneindia Tamil News

பகவான் கிருஷ்ணருக்கும், ராமபக்தனான அனுமனுக்கும், பல வித ஒற்றுமைகள் உள்ளன. அதிசயம் நிறைந்த அந்த ஒற்றுமைகளை தெரிந்து கொள்வோம்.

மாருதி பவளமல்லி வேரில் வசிக்கிறான்.
கண்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன்.

மாருதி ராவணனிடம் தூது சென்றவன், பலனில்லை.
கண்ணன் துரியோதனனிடம் தூது சென்றான், முடிவு யுத்தம்.

ஹனுமன் சீதா தேவிக்கும், பீமனுக்கும் தன் விஸ்வரூபத்தை காட்டினான்.
கிருஷ்ணன் கவுரவ சபையில் விஷ்வ ரூப மெடுத்தான். யுத்த களத்தில் அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் விஸ்வரூபம் காட்டினான்.

ஹனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து லட்சுமணன் உயிரைக்காத்தான். மலையை கொணர்ந்ததால் மலைய மாருதன் என்ற பெயரைப்பெற்றான்.

கண்ணன், இந்திரனுடைய கோபத்தினால் ஏற்பட்டதொரு பெருமழையால் அவதியுற்ற கோபியர்களுக்காக கோவர்தன மலையை தூக்கி குடையாய் பிடித்து காத்தான்.

ஆஞ்சநேயன் சூரியனை விழுங்க முயற்சி செய்தான்

கண்ணனோ ஐந்து தலை நாகராஜனின் மீதேறி நர்த்தனமாடினான்

இந்த ஒற்றுமைகளினால்தான் கண்ணனுக்கும், ஹனுமனுக்கும் வெண்ணெய் நைவேத்தியம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

English summary
Sri Hanuman was born of Anjani from Pavana, the wind-god. He was named Hanuman after the name of the city of Hanumpur over which his maternal uncle Parti Surya ruled. Hanuman's body was hard as a stone. So Anjani named him Vajranga. He is also known by the names "Mahavir" or mightiest hero (because he exhibited several heroic feats), Balibima and Maruti.Lord Krishna is the Supreme Personality of Godhead, as described by the Vedas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X