For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்ல மொழிபெயர்பாளர்கள் கிடைக்காமல் 1 ஆண்டாக தவிக்கும் நாராயணமூர்த்தி லைப்ரரி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் தொன்மையான இலக்கியங்களை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், அவற்றை மொழிப்பெயர்ப்பு செய்யும் பணிக்கு ஆட்கள் கிடைக்காமல், மூர்த்தி பண்டைய இந்திய நூலகம் (எம்.சி.எல்.ஐ.) தவித்து வருவதாக, ரோகன் நாராயண மூர்த்தி தெரித்தார்.

இன்போசிஸ் வழிகாட்டும் தலைவர் நாராயணமூர்த்தியின் மகன் ரோகன் நாராயணமூர்த்தி, இந்தியாவின் பண்டைய இலக்கியங்களை மொழிப் பெயர்த்து வெளியிடும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நாராயணமூர்த்தியின் பெயரில், 'மூர்த்தி பண்டைய இந்திய நூலகம் (எம்.சி.எல்.ஐ.) என்ற பெயரில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் மூலம் பல அரிய இந்திய நூல்களை, உலகிற்கு வெளிக்காட்ட ரோகன் திட்டுமிட்டுள்ளார்.

இதற்காக இந்த நூல்களை மொழிப்பெயர்க்க தகுந்த மொழிப்பாளர்களை பணியமர்த்த கடந்த 1 ஆண்டிற்கு முன் விளம்பரம் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை தகுந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லை என ரோகன் தெரித்துள்ளார்.

இதுகுறித்து ரோகன் நாராயணமூர்த்தி கூறுகையில், "இந்த பணிக்கு தகுந்த மொழிப்பாளர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் கடந்த 1 ஆண்டாக காத்திருந்தோம். பல விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் அவற்றிலிருந்து தகுந்த ஆட்கள் யாரும் தேர்வாகவில்லை. இப்போது இந்த விளம்பரத்தை பார்த்து விருப்பமுள்ள யாராவது வந்தாலும், எங்களுக்கு சந்தோஷம்தான்.

பண்டைய கால புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வைக்க நாங்கள் விரும்பவில்லை. தக்க மொழிப்பெயர்பாளர்கள் மூலம் உலகின் பார்வைக்கு இந்தியாவின் தொன்மை இலக்கியங்கள் கிடைக்க வேண்டும். அவை தற்கால தமிழோ அல்லது கன்னடமோ அல்ல, மிகவும் தொன்மையானவை.

இந்த புத்தகங்களின் உள்ளடக்க பணிகளில் நான் பணியாற்றவில்லை. ஆனால் அதன் மொத்த பணிகளை இயக்குவது மட்டுமே எனது பணி. இந்த நூல்களில் முக்கியமானது கம்பராமாயணத்தை மொழிப்பெயர்க்கும் பணியாகும். இதன்மூலம் பாலி மொழியில் எழுதப்பட்ட கம்பராமாயண காவியத்தை, உலக மக்கள் அனைவரும் படிக்க விரும்புகிறோம்.

அந்த நூலை பக்கத்திற்கு பக்கம் மொழிபெயர்க்க வேண்டும். அதே நேரம், அதன் இந்திய தொன்மை தன்மையும் படைப்பு ஆற்றலும் மாறாமல் உருவாக்கப்பட வேண்டும். மொழிப்பெயர்ப்பு பணிகளை முதலில் டிஜிட்டல் வடிவத்திலும், பின்னர் நூல் வடிவத்திலும் தயாரிக்கப்படுகிறது, என்றார்.

எம்.சி.எல்.ஐ.மூலம் வங்காளம், இந்தி, பாலி, பஞ்சாபி, பாரசீகம், சமஸ்கிரதம், தமிழ்
உள்ளிட்ட இந்திய மொழிகளில் உள்ள பண்டைய படைப்புகளை ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழக பதிப்பகத்தின் நிர்வாக ஆசிரியர் ஷர்மிளா சென் கூறுகையில், "எங்கள் பதிப்பகத்தை தவிர இந்தியாவில் இருந்து வேறெந்த பதிப்பமும் இந்த பணியில் எங்களோடு கூட்டு சேரவில்லை. இதன்மூலம் இந்த நூல்களுக்கு மிகுதியான தேவை ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். இது தொடர்பான பணிகளில் தெற்கு ஆசியா உட்பட உலகம் முழுவதும் செயலாற்றி வருகிறோம்.

கிரேக்க, லத்தீன் மொழி இலக்கியங்களை ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்து வெளியிட்ட லோயீப் பண்டைய நூலகத்தின் மாதிரியை, இந்த பணியில் எம்.சி.எல்.ஐ.யும் பின்பற்றும்", என்றார்.

English summary
The Murty Classical Library of India (MCLI), set up about a year ago to bring the classical literature of India to a global audience, is now scouting for good translators, said Rohan Narayana Murty, son of Infosys Chairman-Emeritus N.R. Narayana Murty. It has been difficult to get good translators and people can submit their proposals to the MCLI for translating. “Anyone approach send us, even now. That would be fantastic,” he told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X