For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவை என்றால் பாவேந்தர்...!

Google Oneindia Tamil News

Bharathidasan Centenary Arch in Puducherry
- முனைவர் மு. இளங்கோவன்

புதுவை என்றால் பாவேந்தர் பாரதிதாசன் அனைவரின் நினைவுக்கும் வருவார். எழுச்சி மிக்க தமிழ்க்கவிதைகளால் கற்றோர் நெஞ்சில் இடம்பிடித்தவர். தமிழகத்தில் கிளர்ந்தெழுத்த தமிழ் உணர்வுக்கு அவர் பாடல்கள் பெரும் பங்களிப்பு செய்தன. பாவேந்தர் வழியில் பாட்டெழுதும் ஒரு பெரும் படையே உருவானது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை உலகில் பாவேந்தரின் தாக்கம் மிகுதி.

புதுவைத் தொடர்பு 1992 ஆம் ஆண்டு முதல் எனக்கு உண்டு. பாவேந்தர் தொடர்பான தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுமேற்கொண்ட காலம் முதல் அவரின் நினைவில்லம் சென்று பார்வை நூல்களைப் பார்ப்பது, படி எடுப்பது என்று தொடர்ந்து பாவேந்தர் ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றேன்.

நேற்று(19.02.2011) பாவேந்தர் நினைவில்லத்தில் பல நூல்களைப் பார்வையிடச் சென்றிருந்தேன். புதுவையின் துளிப்பா முன்னோடிப் பாவலர் சீனு. தமிழ்மணி அவர்களும் வந்திருந்தார். எங்கள் பணிகளை முடித்துக்கொண்டு வெளயே வந்தோம். பாவேந்தர் மறைவுற்றபொழுது அவரை அடக்கம் செய்த நன்காட்டைப் பார்வையிடவேண்டும் என்றேன். பலநாள் நினைத்தும் பணி நெருக்கடிகளுக்கு இடையே என் எண்ணம் கனியாமல் இருந்தது.

அவரும் நானும் புதுவைக் கடற்கரை ஒட்டியப் பாப்பம்மாள் கோயில் வீதியில் இருந்த நன்காட்டை அடைந்தோம்.அங்குப் பல கல்லறைகள் உள்ளன. தமிழகத்தின் எழுச்சி மிக்க பாவலரான பாவேந்தர் மீளாத் துயில்கொள்ளும் இடம் கண்டு செஞ்சுக்குள் அகவணக்கம் செலுத்தினேன். பார்வையிடாத அன்பர்களுக்காகச் சில படங்கள் எடுத்துவந்தேன்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாவேந்தரின் பிறந்த நாள், மறைந்தநாள் வருகின்றன.

நன்றி: http://muelangovan.blogspot.com/

English summary
If you think of Puducherry or Pondicherry one cannot forget Paventhar Bharathidasan. Both are inseparable. Here is a round up on Bharathidasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X