For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதுமலையில் வறட்சி : பிப். 15ம் தேதி முதல் புலிகள் காப்பகத்தை மூட பரிந்துரை

By Chakra
Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வரும் 15-ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகத்தை மூடுமாறு வனத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது,

தற்போது வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முதுமலையில் 90 சதவிகிதம் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, காட்டுத் தீயை கண்காணிப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் வனத் தீ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதுமலையில் வறட்சி நிலவுவதால் வரும் 15-ம் தேதி முதல் புலிகள் காப்பகத்தை மூடுமாறு முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உத்தரவு கிடைத்துவிட்டால் புலிகள் காப்பகம் மூடப்படும். மேலும், சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றார்.

English summary
Forest officials have recommended the closure of Mudumalai tiger reserve from february 15 due to drought. If they get permission reserve will be closed and tourists won't be allowed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X