For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதியாய் இருந்தால் பாதிப்பில்லை!

Google Oneindia Tamil News

குளிர் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணம் கொண்ட சிட்டுக்குருவி ஒன்று தன் இனத்தோடு வாழ்ந்து வந்தது. இலையுதிர் காலத்தின் இறுதிக்கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென் திசையை நோக்கி பறக்க ஆரம்பித்தன. ஆனால் இந்த இளம் சிட்டுக்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாது என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.

குளிர்காலம் வந்தது. குளிரின் ஆக்ரோசத்தில் அந்த சிட்டுக்குருவி கலங்கி விட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து அந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததால் அது மரத்தில் இருந்து கீழே ஒரு விவசாயி வீட்டு முற்றத்தில் விழுந்தது.

அப்போது அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்தச் சிட்டுக்குருவி மீது சாணத்தை போட்டுவிட்டு சென்றது. இதில் சிட்டுக்குருவிக்கு மூச்சுத்திணறினாலும், சாணத்தின் வெப்பம் குளிருக்கு இதமாக இருந்தது.

சூட்டினாலும், மூச்சுவிட முடிந்ததாலும், மகிழ்ச்சியடைந்த அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது. பாட்டுச்சத்தம் கேட்டு அந்தப்பக்கமாக வந்த பூனை சத்தம் திசையை மோப்பம் பிடித்து சாணத்தை விலக்கிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் சந்தோசமாக அதனை விழுங்கிவிட்டது.

இந்த கதை கூறும் மூன்று நீதிகள்

1) உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2) உன்னை சாணத்தில் இருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.

3) நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால் வாயை மூடிக்கொண்டிரு.

English summary
A little bird was flying south for the Winter. It was so cold the bird froze and fell to the ground into a large field.While he was lying there, a cow came by and dropped some dung on him. As the frozen bird lay there in the pile of cow dung, he began to realize how warm he was. The dung was actually thawing him out!He lay there all warm and happy, and soon began to sing for joy. A passing cat heard the bird singing and came to investigate. Following the sound, the cat discovered the bird under the pile of cow dung, and promptly dug him out and ate him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X