For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஜிகிஸ்தான் மசூதிகள்-சர்ச்களில் இளைஞர்கள் வழிபாடு நடத்த தடை

Google Oneindia Tamil News

துஷான்பி: தஜிகிஸ்தான் நாட்டில் இளைஞர்கள் மசூதிகள் மற்றும் சர்ச்சுகளில் தொழுகை, ஜெபம் செய்ய அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளார்.

தஜிகிஸ்தான் நாட்டு அதிபராக கடந்த 1992ம் ஆண்டு முதல் இமோம் அலி ரகுமான் உள்ளார். நேற்று அவரது அமைச்சரவையில், பெற்றோரின் பொறுப்பு என்ற பெயரிலான புதிய மசோதாவிற்கு அதிபர் அனுமதி வழங்கி கையெழுத்திட்டார்.

அதன்படி, நாட்டில் பரவிவரும் மதம் சார்ந்த அடிப்படை தன்மைகளை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
நாட்டின் 98 சதவீதம் மக்கள் முஸ்லீம்களாக உள்ளனர். இந்நிலை அதிகரி்க்காத வகையில், 18 வயதிற்கு குறைந்த வயதினர், மசூதிகள், கிறிஸ்துவ ஆலயங்கள் உள்ளிட்ட மதத் தலங்களில் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சமயங்களுக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்போருக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகி்றது. இது இன்று முதல் கடுமையாக பின்பற்றப்படும். மேலும், 20 வயதிற்கு குறைந்த பெண்கள் காதணி மட்டுமே அணிய அனுமதி உண்டு. பச்சைக் குத்திக் கொள்வது, இரவு கிளப்களுக்கு போவது, ஆபாசம், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றை தூண்டும் திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களை படிப்பதற்கும் தடை விதிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tajikistan President Imomali Rakhmon has banned youths from praying in mosques and churches, prompting a local Muslim leader to call the move “a gruesome gift” for the Muslim holy month of Ramazan. Rakhmon, in power since 1992, signed the bill on “parental responsibility” on Wednesday. He has said tough measures are needed to stop the spread of religious fundamentalism in his country of 7.5 million people, 98 percent of whom are Muslim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X