For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூரில் 4 மணி நேரம் சிலம்பம் சுற்றிய யுகேஜி மாணவி ரக்க்ஷனா

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கும் மாணவி ரக்க்ஷனா என்பவர் தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியில் வசிக்கும் ரவீந்திரன், சங்கீதா தம்பதியின் மகள் ரக்க்ஷனா. இவர் பரணி பார்க் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். கரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெறும் சாதனை நிகழ்ச்சி பரணி பார்க் பள்ளியில் நடத்தப்பட்டது.

இதில் யு.கே.ஜி. படிக்கும் மாணவி ரக்சஷனா தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். மேலும், ஒரு மணி நேரம் முட்டை மீது நின்று இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றினார்.

இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீநிதி கார்த்திகேயன் கடந்த மாதம் தொடர்ந்து 15 மணி நேரம் இடைவிடாது வீணை வாசித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An UKG student Rakshana of Bharani park school, Karur has created a new record by playing silambam continuously for 4 hours. Earlier Srinidhi Karthikeyan of the same school created recoed by playing veena for 15 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X