For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சித்த, ஆயுர்வேத, யூனானி, ஹோமியோபதி மருத்துவர்களுக்கு தனி நல வாரியம் - தமிழக அரசு அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் பரம்பரையாகப் பணியாற்றிவரும் சித்தா, யுனானி, ஆயுர்வேதம் மற்றும் ஹோமிபோதி மருத்துவர்களின் நலனுக்காக தனி நல வாரியம் ஒன்றை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி உத்திரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 679 பரம்பரை சித்த வைத்தியர்கள், 2 ஆயிரத்து 745 ஆயுர்வேத பரம்பரை வைத்தியர்கள் மற்றும் 826 யுனானி பரம்பரை வைத்தியர்கள் மருத்துவமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் சிலர் கிராமப்புறங்களில் அரசு அங்கீகாரம் இல்லாமல் சித்த மருத்துவர்களாக உள்ளனர். அவர்கள் தங்களுக்கு வயது முதிர்ந்த நிலையில் அரசு ஆதரவு பெற அமைப்புசாராத் தொழிலாளர் என்ற முறையில் தனி நல வாரியம் ஒன்றை அமைத்துத்தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனை ஏற்று தமிழகத்தில் பரம்பரையாகப் பணியாற்றிவரும் சித்தா, யுனானி, ஆயுர்வேதம் மற்றும் ஹோமிபோதி மருத்துவர்களின் நலனுக்காக தனி நல வாரியம் ஒன்றை அமைத்து முதலமைச்சர் கருணாநிதி உத்திரவிட்டுள்ளார்.

English summary
Siddha, ayurveda, yunani and homeopathy doctors are getting separate welfare board. They had requested TN CM Karunanidhi to set a welfare board for them . CM accepted their request and set up a welfare board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X