For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் முதல் பாலியல் கல்வி பள்ளி வியன்னாவில் தொடக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sex School
வியன்னா: பாலியல் கல்வி குறித்து இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க முதல் செக்ஸ் பள்ளி ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் தொடங்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இங்கு மாணவர்களாக சேர்ந்து செக்ஸ் கல்வி கற்றுக் கொள்ளலாம் என்று பள்ளியின் நிறுவனரான பெண் தெரிவித்துள்ளார்.

செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினால் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இளைய தலைமுறையினருக்கு பாலியல் கல்வியை பயிற்றுவிக்க உலகிலேயே முதல் பாலியல் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த செக்ஸ் பள்ளியை யுவாமரியா தாம்சன் என்ற பெண் தொடங்கியுள்ளார். பாலியல் தொடர்பான பாடங்கள் இங்கு நடத்தப்படும் தியரி, பிராக்டிக்கல் என இரண்டு வகைகளில் பயிற்றுவிக்கப்படும் இந்த பள்ளியில் இதில் வீட்டுப் பாடமும் உண்டு என்று கூறியுள்ளார் பள்ளியின் நிறுவனர் யுவாமரியா தாம்சன்.

பள்ளி தொடங்கப்பட்டதன் காரணம் குறித்து யுவாமரியா கூறியதாவது:-

செக்ஸ் மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று. அதில் அவர்கள் திருப்தி அடையாவிட்டால் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படும். பலருக்கு செக்ஸ் பற்றி முழுமையான அறிவு இல்லை. இதனால் அவர்கள் கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே தான் செக்ஸை கற்றுக் கொடுப்பதற்காக இந்த பள்ளியை தொடங்கியுள்ளேன்.

பயிற்சி கட்டணம்

எந்தெந்த முறைகளில் செக்சில் ஈடுபட வேண்டும், இதில் என்னென்ன நுட்பங்கள் உள்ளன? என்பது பற்றி முழுமையாக சொல்லி கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பள்ளியில் செக்ஸ் கல்வியை முடிப்பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

English summary
The Austrian International School of Sex (AISOS) open to students near Vienna, by the headmistress of the school, Ylva Maria Thompson. The vision of the school, according to Thompson, is to teach people how to be better lovers. She goes on to say that people spend time and money on training their mind, muscles, and fitness, but do not spend enough effort on developing their love-making skills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X