For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் 2 நாள் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி - 14ம் தேதி தொடங்குகிறது

Google Oneindia Tamil News

குவைத்: குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி 2012 டிசம்பர் 14-15 (வெள்ளி,சனி)ஆகிய இரண்டு நாள் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமமும், பொங்குதமிழ் அறக்கட்டளையும் செய்துள்ளன.

ஃபிந்தாசு அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் தமிழர்களின் மரபுவழி வாழ்க்கையை நினைவூட்டும் காட்சிப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

தமிழர் பண்பாட்டுக் கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அழைக்கப்பட்டுள்ளார். தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தும், தமிழர் பண்பாட்டு வாழ்க்கை குறித்தும் உரையாற்ற உள்ளார்.அதுபோல் தமிழ் இணையப் பயிலரங்கத்திலும் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சியை அறிமுகப்படுத்த உள்ளார்.

பாலை திரைப்படம்

கண்காட்சியில் தமிழர்களின் பண்டைய வாழ்க்கையை நினைவூட்டும் பாலை திரைப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் இசைப்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.

கண்காட்சித் திறப்புவிழாவின் வரவேற்புரையை குரு. முத்துக்குமார் வழங்குகின்றார். இலட்சுமி நாராயணன் அறிமுக உரையாற்றுகின்றார். தமிழர் பண்பாடு குறித்து வளநாடன், செந்தமிழ் அரசு, இராவணன் உரையாற்றுகின்றனர். சிலப்பதிகாரம் குறித்து பழ.கிருட்டிணமூர்த்தி சொற்பொழிவாற்றுகின்றார். குவைத்தில் வாழும் பொறியாளர்கள் பலர் உரையாற்றுகின்றனர்.

விற்பனைக்கு கும்பகோணம் டிகிரி காபி, கூழ்

அரங்கில் கும்பகோணம் டிகிரி காபி, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கூழ், போன்றவையும் எலுமிச்சை சோறு, சாம்பார் சோறு உள்ளிட்ட உணவுகளும் விற்கப்படும். வெற்றிலைப் பாக்கு, சுக்கு காபி பானகம், மூலிகைக்குடிநீர் போன்றவை இலவசமாக வழங்கப்படும்.

பழங்குடியினர் ஓவியங்கள், குறுந்தகடுகள், மென்பொருட்கள், நூல்கள் வாங்கக் கிடைக்கும். 2000க்கும் மேற்பட்ட படங்கள், தமிழகக் கலைப்பொருட்கள், உழவுக்கருவிகள், விளையாட்டுப் பொருட்கள், பனை ஓலைப்பொருட்கள் உள்ளிட்ட தமிழர் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் விளக்கும் விதம்விதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

ஏராளமான நூல்களின் அணிவகுப்பு

கண்காட்சிக்கு வருகை தரும் தமிழ்நாடு பொறியாளர் குழுமம், பொங்குதமிழ் மன்றத்தின் உறுப்பினர்களுக்குத் தமிழ் மருத்துவம் என்ற நூல் இலவசமாக வழங்கப்படும். பல்வகைக் குறுந்தகடுகளும் சிறுநூல்களும் கண்காட்சியில் வெளியிடப்படும், பயனுள்ள பலசெய்திகளை உள்ளடக்கிய கண்காட்சி மலர் வெளியிடப்படும்.

கண்காட்சி காலை 10மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு நாளும் நடைபெறும். அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடன், சேது மாதவன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

மாநாடு கண்காட்சி தொடர்பான மேலும் தகவல்களுக்கு குவைத் தொடர்பு எண்கள்:
தமிழ்நாடன்: 6685 2906, சேது மாதவன்: 65094097

செய்தி: முனைவர் மு.இளங்கோவன்

English summary
A Tamil culture exhibition has been arranged on Kuwait. The expo will be opened on Dec 14th and will be held for 2 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X