For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பிறந்தநாளைக் கொண்டாடிய துபாய் தமிழ்ச் சங்கம்

By Siva
Google Oneindia Tamil News

Dubai Tamil Sangam
துபாய்: துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் பார‌தி பிறந்தநாளையொட்டி பாரதி க‌ண்ட‌ பார‌த‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி 14.12.2012 அன்று மாலை இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ க‌லைய‌ர‌ங்கில் ந‌டைபெற்ற‌து.

விழாவிற்கு துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவி ஜெய‌ந்தி மாலா சுரேஷ் த‌லைமை வ‌கித்தார். துணைத் த‌லைவ‌ர் ஏ.லியாக்க‌த் அலி முன்னிலை வ‌கித்தார். பொதுச் செய‌லாள‌ர் சி. ஜெக‌நாத‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

குத்துவிள‌க்கு ஏற்றி துவ‌ங்கிய‌ விழாவில் ச‌ந்திரா, சீதால‌ட்சுமி, க‌விதா ஆகியோர் இந்திய‌ தேசிய கீத‌த்தையும், த‌மிழ்த்தாய் வாழ்த்தினையும் பாடின‌ர். நிதிசாய் ம‌ற்றும் கிரிஜா ஆகியோர் திருக்குற‌ள் வாசித்து விள‌க்க‌ம் வ‌ழ‌ங்கின‌ர். லோகிதா சுவாமிநாத‌ன் இன்று ஒரு த‌கவ‌ல் வ‌ழ‌ங்கினார்.

அரேபிய‌ன் பிசின‌ஸ் இத‌ழின் சிற‌ப்பு மிகு இந்திய‌ராக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ச் ச‌ங்க‌ க‌ன்வீன‌ர் கே. குமார் கௌர‌விக்க‌ப்ப‌ட்டார். த‌மிழ‌ர் ஒருவ‌ர் இத்த‌கைய‌ உய‌ர்நிலையைப் பெற்ற‌மைக்காக‌ துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் பெருமித‌ம் கொள்வ‌தாக‌ தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

ஏற்புரை நிக‌ழ்த்திய‌ கே.குமார் இதுபோன்ற‌ விருதுக‌ளும், கௌர‌வ‌மும் துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் போன்று அனைவ‌ர‌து ஒத்துழைப்பின் கார‌ண‌மாக‌வே கிடைத்து வ‌ருகிற‌து என்றார்.

திரைப்ப‌ட‌ பாட‌லாசிரிய‌ர் க‌விஞ‌ர் ர‌விபார‌தி சிற‌ப்பு விருந்தினராக‌ க‌ல‌ந்து கொண்டு பார‌தியின் பெருமையை ப‌றைசாற்றினார். அவ‌ருக்கு துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வ‌ழ‌ங்கியும் கௌர‌வித்த‌து.

உடை அல‌ங்கார‌ம், பாட‌ல் நிக‌ழ்ச்சி உள்ளிட்ட‌வ‌ற்றில் ப‌ங்கேற்ற‌ குழந்தைக‌ளுக்கு நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌து. பொருளாள‌ர் கீதா கிருஷ்ண‌ன் ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார்.

பெட்டினா ஜேம்ஸ் ம‌ற்றும் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா ஆகியோர் நிக‌ழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கின‌ர். நிக‌ழ்ச்சிக்கான ஏற்பாடுக‌ளை ஜெக‌நாத‌ன், ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, கீதா கிருஷ்ண‌ன், சுந்த‌ர், பிர‌ச‌ன்னா, பாலா, விஜ‌ய‌ராக‌வ‌ன், விஜ‌யேந்திர‌ன் உள்ளிட்ட‌ குழுவின‌ர் செய்திருந்த‌ன‌ர். நிக‌ழ்ச்சிக்கு பின்ன‌ர் இர‌வு உண‌வுக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

English summary
Dubai Tamil Sangam celebrated Bharathiar's birthday by arranging for a programme called 'Bharathi Kanda Bharatham' on december 14 in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X