For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் ஹியூமர் கிளப்பின் 'நகைச்சுவை கொண்டாட்டம்'

Google Oneindia Tamil News

Humour Club
துபாய்: துபாயில் ஹியூமர் கிளப் இண்டர்நேஷ்னல் துபாய் கிளையின் அக்டோபர் மாதாந்திர கூட்டம் கடந்த 12ம் தேதி மாலை 6 மணிக்கு, அல் கிசைஸ், ஆப்பிள் இண்டர்நேஷ்னல் பள்ளியில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் எம்.முகைதீன் பிச்சை வரவேற்புரை நிகழ்த்திய போது, துபாயில் வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலே ஹியூமர் கிளப் மாதந்தோரும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், அதில் தமிழர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடையவும் அழைப்பு விடுத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துபாய் ஈ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் எம்.டி. ஆபீஸ் மேலாளர் எஸ்.எஸ்.மீரான் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிரிப்பின் அவசியத்தை 'விருதை' செய்யது ஹுசேன் கவிதை நடையில் மேடையில் பாட்டாகவும் பாடி காட்டினார். மேலும் வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகிகளான கீழைராஜா மற்றும் காவிரிமைந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு ஹியூமர் கிளப்பை வாழ்த்தியும், நகைச்சுவை மனிதர்களின் நோய் தீர்க்கும் மருந்து எனவும் தெரிவித்தனர்.

ஹியூமர் கிளப்பின் உறுப்பினர்களான காமேஸ்வரன், பாவை நியாஸ், சேஷாத்திரி, குமார், 'வெல்ஃபேர்' ராஜேந்திரன், மற்றும் விருந்தினர்களான 'டோஸ்ட் மாஸ்டர்' ரமேஷ், சந்திரசேகர் (தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி), 'அஸ்கான்' கபீர் ஆகியோர் தங்களின் நகைச்சுவை பேச்சால் அரங்கை அதிர வைத்தனர். சிறுமி ஆயிஷா, சிறுவன் கார்த்திக் ஆகியோரும் நகைச்சுவை துணுக்குகளை சொல்லி வந்திருந்தவர்களை சிரிக்க வைத்து, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியை சங்கத்தின் புரவலர் 'பாலைவன நகைச்சுவை புயல்' கே.ஜி.குணா, அவருக்கே உரித்தான நகைச்சுவை பேச்சோடு தொகுத்து வழங்கினார். விழா முடிவில் வருகை தந்த அனைவருக்கும் சங்கத்தின் செயலாளர். கமலக்கண்ணன் நன்றி தெரிவித்து பேசினார். கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் பொருளாளர் சுல்தான், உதவிச்செயலாளர் கான் முஹம்மது, கமிட்டி உறுப்பினர்கள் அன்சாரி மற்றும் அனீஸ் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

English summary
The monthly meeting of World humour club dubai branch held in Dubai on oct 12th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X