For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வ‌ங்கியின் துபாய் மாரத்தான் 2012

By Siva
Google Oneindia Tamil News

Standard Chartered Dubai Marathon 2012
துபாய்: துபாயில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வ‌ங்கியின் ஆத‌ர‌வில் ந‌டைபெற்ற‌ துபாய் மாரத்தான் 2012 கடந்த 27ம் தேதி அன்று புர்ஜ் கலிபா வளாகத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக ஜுமைரா கடற்கரை சாலை வரை சென்று மீண்டும் அதே வழியாக 42.195 கி. மீ. முடிவு எல்லையை சென்றடைந்தது.

இந்த வழித்தடத்தில் 40வது கிலோ மீட்டரில் ஓட்டப்பந்தய வீரர்களுக்கான குடி நீர் வழங்கல் மற்றும் உதவி நிலையத்தில் ஈ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அஹமது சுலைமான் தலைமையில் சேவை புரிந்தனர்.

இதில் சர்வதேச வீரர்கள் உட்பட சுமார் 20,000 பேர் கலந்து கொண்டனர். இதில் எத்தியோப்பிய வீரர் அயிலே ஆப்ஷேரோ பந்தய தூரத்தை 2 மணி 4 நிமிடம் 23 வினாடிகளில் கடந்து ஹெயிலே காப்ர்செலாசியின்(2008 ) சாதனையை முறியடித்தார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் எத்தியோப்பிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. முதற் பரிசாக ரூ.12,348,800 வழங்கப்பட்டது.

English summary
Standard chartered bank conducted Dubai Marathon 2012 in Dubai on january 27. Ethiopian men and women dominated the race and finally Ethiopia's Ayele Abshero won the first prize by covering 42.195 km in 2 hours 4 minutes and 23 seconds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X