For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நமக்கொரு குட்டி மகாராஜா வரப்போறான்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருமணமாகி சில மாதங்களில் தாய்மை அடைந்த பெண்களுக்கு தான் கர்ப்பமடைந்த தகவலை முதன் முதலாக கணவனிடம் சொல்லவேண்டும் என்று ஆசையாய் காத்திருப்பார்கள்.

அந்த தகவலை எப்படிச் சொல்வது, அதைக் கேட்ட உடன் கணவரின் முகத்தில் என்ன மாதிரியான ரியாக்சன் வரும் என்றெல்லாம் கூட ஆசை ஆசையாய் எதிர்பார்ப்பார்கள்.

கர்ப்ப விசயத்தை சாதாரணமாக சொல்வதை விட அதையும் கிரியேட்டிவாக சொல்லலாம். அதன் மூலம் உங்கள் கணவரை கூடுதலாக மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இரண்டு காபி கப் உடன் ஒரு குட்டி காபி கப் வைப்பதைப் போல, புளிப்பாக சாப்பிடவேண்டும் போல இருக்கிறது என்பதைப் போல வித்தியாசமாக சொல்லலாம்.

இன்னும் சில ஆலோசனைகள் இருக்கின்றன கேளுங்களேன்.

நம்ம குட்டி ராஜாவுக்கு….

நம்ம குட்டி ராஜாவுக்கு….

கணவருடன் ஷாப்பிங் போங்க... அழகாக குட்டியாக ஒரு பொம்மையோ, சட்டையோ வாங்குங்கள். இது வீட்டுக்கு வரப்போற குட்டி மகாராஜாவுக்கு என்று சொல்லுங்கள். கணவரின் முகம் வெட்கத்தில் பூரிக்கும்.

ஹேப்பி பாதர்ஸ் டே

ஹேப்பி பாதர்ஸ் டே

அழகாய், க்யூட்டாய் ஒரு கார்டு ரெடி செய்து ‘ஹேப்பி பாதர்ஸ் டே' என்று போட்டு கொடுங்களேன். அவர் அப்பாவான தகவலை அழகாக புரிந்து கொள்வார்.

குளுமையாய் ஒரு தகவல்

குளுமையாய் ஒரு தகவல்

அழகாய் ஒரு ஐஸ்கிரிம் கிண்ணத்தில் ஐஸ்கிரீம் போட்டு அதில் குட்டி மகாராஜா வரப்போறான் என எழுதி கொடுங்களேன். அதை சாப்பிடும் போது அடையும் சந்தோசத்திற்கு ஈடு இல்லை.

விளையாட்டாய் விளையாடுங்கள்

விளையாட்டாய் விளையாடுங்கள்

சின்னதாய் ஒரு குறுக்கெழுத்துப் போட்டி வைத்து அதில் கர்ப்பத்தகவலை சொல்லாம். சோழி, சங்கு, சின்னதாய் முத்து இவைகளை வைத்து எழுதியும் காட்டலாம். அப்புறம் பாருங்கள் அவரின் ரியாக்சனை.

சின்ன தட்டில் உணவு

சின்ன தட்டில் உணவு

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சாப்பிடும் போது சின்ன கிண்ணத்தில் சாப்பாடு போட்டு வையுங்கள். இது யாருக்கு என்பதைப் போல கணவர் பார்த்தால். இன்னும் சில மாதங்களில் நம் வீட்டுக்கு வரப்போகிற குட்டி விருந்தாளிக்கு என்று சொல்லுங்களேன்.

குட்டியாய் ஒரு கிப்ட்

குட்டியாய் ஒரு கிப்ட்

கணவருக்குத் தெரியாமல் ஷாப்பிங் போய் ஒரு கிப்ட் வாங்குங்கள். அதில் ‘உலகின் மிகச் சிறந்த தந்தையாகப் போகிறவருக்கு' என்று எழுதி இரவில் படுக்கை அறையில் பரிசளியுங்கள்.

பிக்னிக் போங்களேன்.

பிக்னிக் போங்களேன்.

கணவருடன் சேர்ந்து பிக்னிக் போங்கள். அதில் குட்டிக்குழந்தைக்குத் தேவையான பொருட்களையும் எடுத்துவைத்து கிளம்புங்கள். அங்கே சென்று அழகாய் சொல்லுங்கள் உங்கள் தாய்மை தகவலை.

அழகாய் பூக்குதே

அழகாய் பூக்குதே

சின்னதாய் ஒரு செடியை பூவோடு வைத்து தண்ணீர் ஊற்றிங்கள். நானும் இப்படி பூத்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லுங்கள்.

நான் அம்மாவாகப் போகிறேன்

நான் அம்மாவாகப் போகிறேன்

தாய் பறவை, தன் குட்டிப் பறவைகளுக்கு உணவூட்டுவதைப் போன்ற படத்தை வாங்கி சுவற்றில் மாட்டுங்கள். அல்லது டி சர்ட் அணியுங்கள். அப்புறம் என்ன அவர் அழகாய் புரிந்து கொள்வார்.

நல்ல அப்பா நீங்கள்?

நல்ல அப்பா நீங்கள்?

பிறக்கப் போகும் குழந்தைக்கு நல்ல பெற்றோர்களாக இருப்பது இருவரின் கடமை. ஒரு அமைதியான தருணத்தில் உங்கள் கணவரின் கையைப் பிடித்துக் கொண்டு கேளுங்கள். நீங்கள் ஒரு நல்ல அப்பாவாக இருப்பீர்களா என்று. உங்களின் தாய்மை உணர்வை அவர் புரிந்து கெள்வார்.

English summary
You are giddy with joy and are completely overwhelmed. Curious mixtures of emotions are rushing through your head, from happiness to tranquillity. Yes, you are officially pregnant! But have you thought of how you will break this news to your hubby? If not, then here are some simple ideas to break the news to him with a slight dramatic flair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X