For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜித்தாவில் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

ஜித்தா: தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பின் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி ஜித்தாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளாமான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அடிக்கடி பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்து வரும் தஃபாரெஜ்-ஜித்தா அமைப்பினர் இந்த முறை 11வது குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு கடந்த 23ம் தேதி இரவு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் குடும்பத்தினர் குழந்தைகள் சகிதமாய் கலந்து கொண்டனர். மாலை 7 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள் மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடந்தது.

A jolly get together in Jeddah

இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்ப ந்தயம், மியூஸிக்கள் சேர், மாத்தி யோசி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு பிரத்யேகமாக ஸ்கிப்பிங், அறிவுத்திறன் போட்டி, ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டன. அதுபோல் ஆண்களுக்காக அறிவுத்திறன் போட்டி, ஓட்டப் பந்தயம், மியூஸிக்கள் சேர், வாலிபால், கயிர் இழுத்தல், டங் ட்விஸ்டர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியின் இடையில் மௌலவி. நூஹ் அல்தாபியின் மார்க்க சொற்பொழிவு நடந்தது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏராளமான பரிசுகள் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் வழங்கப்பட்டன.

முன்னதாக வந்திருந்த அனைவருக்கும் மாலை சிற்றுண்டியாக தேநீர், காபி, ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டன. இரவு மட்டன் பிரியாணி வழங்கியதுடன், நிகழ்ச்சி முடியும் வரை குடிநீர், தேநீர், பிஸ்கட், குழந்தைகளுக்காக சிப்ஸ், ஜூஸ் போன்றவைகள் பரிமாறப்பட்டன.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.

English summary
TAFAREG-Jeddah arranged for a family get together in Jeddah on may 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X