For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் அரங்கேற்றம் நடத்திய துபாய் பள்ளி மாணவி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு. விஜயேந்திரன் அவர்களின் மகள் செல்வி. காவியாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 17ம் தேதி தி.நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயா கலையரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர். விஸ்வநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விஸ்வநாதன் அவர்கள் காவியாவின் குடும்பத்தினருடன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கியும் வைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காவியாவின் நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நிகழ்ச்சியின் அங்கமாக, குச்சுப்புடி நடனத்தின் பாடல்களுக்கும் அவர் திறம்பட நடனமாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். நடனங்களின் இடைப்பட்ட நேரத்தில் திரு. விஜயேந்திரன் "கண்ணால் காண்பதும் பொய்" என்ற அறிவியல் நிகழ்ச்சியை நடத்தினார்.

Dubai school girl's arangetram in Chennai

நிகழ்ச்சிக்கு துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவன புரவலர் திரு. லியாகத் அலி, மற்றும் பொழுது போக்கு துறை செயலாளர். திரு. முகமது தாஹா, பொக்கிழதாரர். திரு.கீதா கிருஷ்ணன், மற்றும் இணை. பொக்கிழதாரர். திரு.சுந்தர்ராஜன் தன குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வழக்கறிஞர் திருமதி. எழில் கரோலீனுக்கு திருமதி. எழிலரசி விஜயேந்திரன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். அவரும் காவியாவிற்கு பொன்னாடை அணிவித்து ஆசீர்வாதம் செய்தார்.

விழா மேடையில் திரு. விஸ்வநாதன், திரு. லியாகத் அலி, மற்றும் அண்ணா பல்கலைக்கழக அச்சுத்துறை முன்னாள் தலைவர் திருமதி. டாக்டர். லலிதா ஜெயராமன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரின் சிறப்பு பேச்சும் இடம்பெற்றது.

வசிக்கும் தேசம் அயல் தேசமானாலும், தமிழ்க்கலாச்சரம் மாறாமல் பரதநாட்டியத்தை கற்று அரங்கேற்றிய காவியாவையும், அவர்களின் பெற்றோரையும், நடன குரு. திருமதி. கவிதா பிரசன்னா அவர்களையும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர்.

நடன உடை மாற்றும் இடைப்பட்ட நேரத்தில் செல்வன். ப்ரீதம் விஜயேந்திரனின் பாட்டும், பின்னர் ப்ரீதம் விஜயேந்திரனுடன் சேர்ந்து செல்வன். ஹரிஷ் சிவகுமார், செல்வன். கௌஷிக் ஜெயகுமார் "அபாகஸ் " என்னும் மனக்கணித செயல்முறையை செய்து காண்பித்தனர். பின்னர், செல்வி. ஷிவானி சிவகுமாரின் பாரதியார் பாடல்கள் அனைவரையும் மெய் மறக்க செய்தது. செல்வி. தேவதர்ஷினி கெளரிசங்கரின் நடனம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. செல்வன். யாஷிஷ் கெளரிசங்கரின் கராத்தே செயல்முறை விளக்கமும் சிறப்புற நடந்தது.

நிகழ்ச்சியை. திரு. அருன்பாபா கணேசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் குரு. திருமதி. கவிதா பிரசன்னா, பாடல் பாடிய திருமதி. வசந்தா சங்கர்ராம், மிருதங்கம் வாசித்த திரு. சங்கரராமன், வயலின் வாசித்த செல்வி. நந்தினி, மற்றும் புல்லாங்குழல் வாசித்த திரு.சாய் நரசிம்மன் அவர்களுக்கு காவியா தன் பெற்றோருடன் சேர்ந்து மரியாதை செய்தார்.

மாலை 6.00 மணி அளவில் துவங்கிய நிகழ்ச்சி நண்பர்கள், உறவினர்களின் ஆசியுடன், இரவு உணவுடன் 9 மணி அளவில் நிறைவுபெற்றது.

English summary
TN based Kavya Vijayendran who is studying in a school in Dubai performed Bharathanatya arangetram in Chennai on august 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X