For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘5ல் வளையாத குழந்தைகளை அடிக்காதீங்க... அப்புறம், 20துலயே ஹார்ட்அட்டாக் வந்துடுமாம்...

Google Oneindia Tamil News

லண்டன்: சிறுவயதில் அதிகமாக அடிவாங்கும் அல்லது திட்டப்படும் குழந்தைகளுக்கு பின்னாளில் ஆஸ்துமா, இதயநோய் மற்றும் கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியில் கண்டறியப் பட்டுள்ளது.

பொதுவாக, அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் பயனில்லாமல் போய் விடும்' எனவும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' எனவும் குழந்தைகளை சிறு வயதிலேயே அடித்து வளர்க்க வேண்உம் என்பதற்கு தமிழில் உள்ள பழமொழிகள்.

ஆனால், சிறு வயதில் அளவுக்கு அதிகமாக அடித்தாலோ, திட்டினாலோ அவர்கள் வெகு சீக்கிரமே நோயாளிகள் ஆகும் வாய்ப்பு அதிகம் என அச்சுருத்துகிறது இந்த ஆய்வு.

தொடரும் ஆய்வுகள்...

தொடரும் ஆய்வுகள்...

இந்த ஆய்வு, அதிகமாக கண்டிக்கப் படும் அல்லது தண்டிக்கப் படும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றி மேற்கொள்ளப் பட்ட ஆய்வின் தொடர்ச்சியே...

திட்டாதீங்க...

திட்டாதீங்க...

பெற்றோரால், ஆசிரியர்கள் அல்லது மற்றவர்களால் அளவுக்கதிகமாக கண்டிக்கப்போது அல்லது தண்டிக்கப் படும் போது குழந்தைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களாம். இது படிபடியாக அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்க ஆரம்பித்து விடுகிறதாம்.

நோய்க்காரணி...நோய் முதற்காரணி

நோய்க்காரணி...நோய் முதற்காரணி

பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், குழந்தைகளின் மன அழுத்தமே பின்னாளில் அவர்களுக்கு உருவாகும் நோய்க்கான முக்கியக் காரணி என்பது கண்டறியப் பட்டுள்ளதாம்.

ஆரோக்கியசாலிகள்...

ஆரோக்கியசாலிகள்...

இந்த ஆய்வு ஆரோக்கியமான 250 மனிதர்களிடம் அவர்களாது குழந்தைப் பருவம் பற்றி கேட்டறியப் பட்டது. பின்னர் அதே கேள்விகள் 150 இதய நோயாளிகள் மற்றும் 150 கேன்சர் நோயாளிகள் மற்றும் 150 ஆஸ்துமா நோயாளிகளிடமும் கேட்கப் பட்டது.

மன அழுத்தம்...

மன அழுத்தம்...

முக்கியமாக சிறு வயதில் அவர்கள் அனுபவித்த மன நீதியான மற்றும் உடல் ரீதியான சித்ரவதைகளும், அதனால் அவர்கள் அடைந்த மன அழுத்தம் குறித்தும் கேள்விகள் தயாரிக்கப் பட்டது.

கேன்சர் அதிகம்...

கேன்சர் அதிகம்...

அனைவரது பதில்களும் ஆராயப் பட்டதில், கேன்சர் நோயாளிகள், ஆரோக்கியமானவர்களை விட 70 சதவீதம் தங்களது சிறு வயதில் பாதிக்கப் பட்டது தெரிய வந்ததாம்.

பாதிப்புகள்....

பாதிப்புகள்....

அதேபோல், இதய நோயாளிகள் 30 சதவீதமும், ஆஸ்துமா நோயாளிகள் 60 சதவீதமும் அதிகமாக பாதிக்கப் பட்டது உறுதியானதாம்.

English summary
Smacking or shouting at your children may put them at a greater risk of cancer, heart disease and asthma later in life, a new study has warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X