For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(பிரியமானவர்களை) கட்டிப்பிடித்தால் ;'பி.பி'. குறையும், 'மெமரி' அதிகரிக்கும்!

By Siva
Google Oneindia Tamil News

Hugging can lower BP, boost memory
லண்டன்: கட்டிப்பிடித்தால் ரத்த அழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் பிரியமானவர்களை கட்டிப்பிடித்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் நினைவாற்றலும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாரைக் கட்டிப்பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்தே நினைவாற்றல் அதிகரிக்கும்.

அவ்வளவாக பழக்கமில்லாதவரை கட்டிப்பிடித்தால் எதிர்மறை விளைவுகள் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரியமானவர்களை கட்டிப்பிடிப்பதால் பாசம் அதிகரிப்பதுடன் உங்களின் பர்சனாலிட்டியும் மென்மையானதாகிவிடுகிறதாம். பிரியமானவர்களை அடிக்கடி கட்டிப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாளடைவில் பிறருக்காக அதிகம் இரக்கப்படுபவர்களாகிவிடுகிறார்களாம்.

இருவருமே பாசத்துடன் கட்டிப்பிடித்தால் மட்டுமே நல்ல விளைவுகள் ஏற்படுகிறதாம். தெரியாதவர்கள், நெருக்கமில்லாதவர்கள் தேவையில்லாமல் கட்டிப்பிடித்தால் டென்ஷன் தான் ஏறுமாம்.

English summary
Hugging a loved one not only helps you bond with them but also gives you a host of health benefits by lowering blood pressure and even improving memory, according to a new study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X