For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொஞ்சம் புன்னகை… நிறைய காதல்…

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஆரோக்கியம்தான் அழகு என்பார்கள். அழகாக சிரித்தால் ஆரோக்கியம் கூடும் என்கின்றனர் நிபுணர்கள். அதனால்தான் பண்டைய காலத்திலேயே வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள்.

புன்னகைப்பவர்களின் முகம் அழகாகும். வாய்விட்டு சிரிப்பவர்கள் வாழ்க்கையில் வரும் எத்தனை துன்பத்தையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்வார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றாக சிரிப்பவர்களின் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியானதாக உற்சாகமானதாக இருக்கும் என்கிறார் பிரபல சைக்கலாஜிகல் நிபுணர்

சிரிப்பதன் மூலம் இளமை திரும்புமாம், முகம் அழகாகுமாம். உடல் எடை கூட குறையும் என்று தனது ‘இம்ப்ரூவ் யுவர் லைப் வித் தி சயின்ஸ் ஆப் லாப்டர்' நூலில் எழுதியுள்ளார்

கடுகடுப்பாய் பேசுபவர்களைவிட புன்னகையோடும், நகைச்சுவை உணர்வோடும் பேசுபவர்களைச் சுற்றி நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். அதுதான் சிரிப்பின் வலிமை.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள்

சிரிக்கும் போது மூளையில் சிறப்பான ரசாயனங்கள் சுரக்கின்றன. இது நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது. நாம் காண்பது எல்லாம் நல்லதாக தெரிகிறது. அதேபோல் நம்மை பார்ப்பவர்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.

முகம் அழகாகும்

முகம் அழகாகும்

சிரிக்கும் போது முகத்தில் உள்ள தசைகள், நரம்புகள் உற்சாகமடைகின்றன. இதனால் எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகிக்காமல் முகம் அழகாகும்.

நல்ல உறக்கம்

நல்ல உறக்கம்

மகிழ்ச்சியோடும், புன்னகையோடும் வாழ்க்கையை தொடங்குபவர்கள் சந்தோசத்தோடு உறங்கப் போவார்கள் என்கின்றனர். உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்பும் குறைகிறதாம்.

எளிதான உடற்பயிற்சி

எளிதான உடற்பயிற்சி

தினசரி 10 நிமிடங்கள் வாய்விட்டு சிரிப்பவர்களுக்கு உடலில் உள்ள தசைகள் பிட்டாக இருக்குமாம். ஜிம் போகாமலேயே அவர்களின் உடல்தசைகள் இறுகும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

உணவோடு தொடர்பு

உணவோடு தொடர்பு

சிரிப்பானது மூளையினை சரியான வழியில் தூண்டுகிறது. தவறான உணவுகளை தேர்ந்தெடுப்பதை தடுத்து நம்முடைய உணர்வுக்கு ஏற்ற உணவினை தேர்தெடுக்கத் தூண்டுகிறது. ஜங்க் ஃபுட், பாஸ்ட் ஃபுட், போன்ற உடலுக்கு கெடுதி தரும் உணவுகளை சாப்பிடுவதைக் கூட தடுக்கிறதாம்.

இளமையை தக்கவைக்கும்

இளமையை தக்கவைக்கும்

சிரிப்பானது இளமையைத் தக்கவைக்கும் அருமையான மருந்து. இது முதுமையைத் தடுக்கிறது. மனஅழுத்தத்தை தடுக்கிறது. கண்களை ஒளியோடு வைத்திருக்கும். முகம் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். சருமம் பொலிவடையும். சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

காதல் வசமாகும்

காதல் வசமாகும்

நன்றாக சிரித்து மகிழ்ச்சியோடு வாழ்பவர்களின் காதல் வாழ்க்கையும், தாம்பத்யமும் உற்சாகமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

அப்ப நீங்களும் இனி சிரிக்க மறக்காதீங்க சரியா?

English summary
Experts have claimed that a good laugh can boost your sex life and help you live longer. Psychologist Stephanie Davies said that it’s also the key to looking young and losing weight. Her book, Laughology: Improve Your Life With The Science Of Laughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X