For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமத்து திருவிழா: பாவாடை தாவணி பட்டாம்பூச்சிகள்… மஞ்சத்தண்ணீர் விளையாட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கரகம் எடுத்தல்... கத்தி போடுதல்..... அம்மன் ஊர்வலம், பால்குடம், முளைப்பாரி என கிராமங்களில் திருவிழா என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது.

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் ஊருக்குச் செல்வதே இதுபோன்ற திருவிழாக்களுக்குத்தான். சொந்த பந்தம், நட்புகளுடன் கொண்டாட்டமாய் கழியும் அந்த பத்து நாட்களும் உற்சாகம்தான்.

ஒரு வருடம் வேலை செய்த களைப்பினை போக்கி புத்துணர்ச்சி தருவது இதுபோன்ற திருவிழாக்கள்தான். இந்த ஆண்டு சிவகாசி அருகே ராமலிங்கபுரம் கிராமத்தில் பெரிய கும்பிடு எனப்படும் திருவிழா நடைபெற்றது. நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த திருவிழா இந்த தலைமுறையைச் சேர்ந்த நாங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திருவிழாவின் முக்கியத்துவத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

48 நாட்கள் விரதம்

48 நாட்கள் விரதம்

பெரியகும்பிடு என்பது எல்லோராலும் கொண்டாட முடியாது. 48 நாட்கள் கடுமையான விரதம் இருக்கவேண்டும். இரண்டு வேளை உணவு, செருப்பு கூட போடாமல் கடுமையான விரதம் இருப்பது அவசியம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஒரு கிராமமே 48 நாட்கள் விரதம் கடைபிடித்தனர்.

கோவில் கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம்

ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு கிராமத்தின் புடை சூழ வெகு விமரிசையான கும்பாபிஷேகம்.

மஞ்சள் தேவதைகள் பால்குடம்

மஞ்சள் தேவதைகள் பால்குடம்

ஆயிரக்கணக்காக கிராமப் பெண்கள் எடுத்து வந்த பால்குடம்.

அம்மனுக்கு பாலபிஷேகம்

அம்மனுக்கு பாலபிஷேகம்

பெண்கள் எடுத்து வந்த பால் குடத்தில் அம்மனுக்கு அபிஷேகம்

கண் திறந்த அம்மன்

கண் திறந்த அம்மன்

பாலபிஷேகம் நடக்கும் போதே அம்மன் கண் திறந்து அருள் புரிந்ததாக தீயாக தகவல் பரவியது.

குத்துவிளக்கு பூஜை

குத்துவிளக்கு பூஜை

குலம் தழைக்க அம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை செய்த பெண்கள்

அம்மனை அழைக்க புறப்பாடு

அம்மனை அழைக்க புறப்பாடு

ஊர் எல்லையில் இருந்து கிராமத்திற்கு அம்மனை அழைத்து வர சென்ற ஆண்கள்

அம்மன் கரகம்

அம்மன் கரகம்

மல்லிகைக் கரகத்தில் எழுந்தருளிய அம்மன்... ஊரே திரண்டு வந்து வழிபட்டனர்.

பட்டாம்பூச்சிகள்

பட்டாம்பூச்சிகள்

கிராமத்து திருவிழாவில் பாவாடை தாவணி பட்டாம்பூச்சிகளுக்கு பஞ்சமிருக்காதே.

கத்தி போட்ட இளசுகள்

கத்தி போட்ட இளசுகள்

அம்மனுக்கு சக்தியூட்ட ஆக்ரோசமாக கத்தி போட்டு வழிபட்ட சிறுவர்களும், இளைஞர்களும்.

அம்மன் ஜம்தாடு

அம்மன் ஜம்தாடு

ஜம்தாடு கத்தியில் தான் அம்மன் உறைகிறாள் என்பது ஐதீகம். புனித நீர் நிறைந்த பானையில் 24 மணிநேரம் எந்த வித ஆதாரமும் இன்றி அம்மன் சக்தியாய் நின்று அருள்புரிந்தாள்.

முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

அம்மனுக்கு முளைப்பாரி எடுத்த இளம் பெண்கள்.

அலங்கார ரூபினி

அலங்கார ரூபினி

அபிஷேக ஆராதனை முடிந்து அலங்கார ரூபினியாய் எழுந்தருளிய ராமலிங்க சவுடாம்பிகை அம்மன்.

மஞ்சத்தண்ணி

மஞ்சத்தண்ணி

திருவிழா முடிந்த அடையாளமே மஞ்சத்தண்ணீர் விளையாட்டுதான் மாமன் மகள், அத்தை மகன் என ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீற்றி விளையாடுவார்கள். அதோடு திருவிழா முடிந்து விடும். அப்புறம் என்ன அடுத்த திருவிழாவிற்கு இன்னும் ஒருவருடம் இருக்கே என்ற ஆதங்கத்தோடு அவரவர் ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்.

English summary
Villages are always beautiful and the festivals are always memorable one. Here is one story about village festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X