For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்ம விருதுகள் அறிவிப்பு: எஸ். ஜானகிக்கு பத்ம பூஷண் ; நடிகை ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறையைச் சேர்ந்த 108 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல், தொழில்நுட்பத் துறை, வர்த்தகம், தொழில் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இந்திய அரசுப் பணி உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் யஷ்பால் உள்ளிட்ட 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், உள்ளிட்ட 24 பேருக்கு பத்ம பூஷண் வழங்கப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவி, நானா படேகர், திரைப் பட இயக்குனர் ரமேஷ் சிப்பி உள்ளிட்ட 80 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கப்படும்.

யாஷ்பால் பத்மவிபூஷண்

யாஷ்பால் பத்மவிபூஷண்

அறிவியல், தொழில்நுட்பத் துறையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் யஷ்பால் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். நரசிம்மா ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட உள்ளது. அதேபோல் கலை, இலக்கியப் பிரிவில் ஒடிசாவைச் சேர்ந்த ரகுநாத் மொஹாபத்ரா, தில்லியைச் சேர்ந்த எஸ். ஹைதர் ரஸா ஆகியோர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராஜேஸ்கண்ணாவிற்கு பத்மபூஷண்

ராஜேஸ்கண்ணாவிற்கு பத்மபூஷண்

கலைத்துறையைச் சேர்ந்தவர்களில் பாலிவுட் நடிகர் ராஜேஸ்கண்ணா, நடிகை ஷர்மிளா தாகூர், பின்னணிப் பாடகி எஸ். ஜானகி உள்ளிட்டோருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் டி.ராமா நாயுடு (ஆந்திரம்), சரோஜா வைத்யநாதன் (கலை-தில்லி), அப்துல் ரஷீத் கான் (மேற்கு வங்கம்), ஜஸ்பால் சிங் பட்டி (பஞ்சாப்), ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராகுல் டிராவிட் பத்மபூஷண்

ராகுல் டிராவிட் பத்மபூஷண்

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராகுல் டிராவிட், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்பம் பிரிவில் டாக்டர் ஏ. சிவதாணுப் பிள்ளை, டாக்டர் அசோக் சென், வி.கே. சாரஸ்வத், பி.என். சுரேஷ், பேராசிரியர் சத்யா என் அட்லூரி (அமெரிக்கா), பேராசிரியர் ஜோசப் சந்திர பட்டி ( அமெரிக்கா), ஆகியோருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் குழுமம் தலைவர் ஆர்.தியாகராஜன் (தொழில் வர்த்தகம் - தமிழ்நாடு), கோத்ரெஜ் குழுமம் தலைவர் ஆதி கோத்ரெஜ் (தொழில் வர்த்தகம் - மகாராஷ்டிரம்),), மங்கேஷ் பட்கோங்கர் (இலக்கியம் & கல்வி - மகாராஷ்டிரம்), பேராசிரியர் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் (கலை இலக்கியம் - அமெரிக்கா), டாக்டர் மகாராஜ் கிஷண் பன் (பொது நிர்வாகம் - தில்லி),

பத்மஸ்ரீ: நடிகை ஸ்ரீதேவி நானா படேகர்

பத்மஸ்ரீ: நடிகை ஸ்ரீதேவி நானா படேகர்

நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் நானா படேகர், ஷோலே பட இயக்குநர் ரமேஷ் சிப்பி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பத்மஸ்ரீ

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பத்மஸ்ரீ

ஈரோடு தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன் (சமூக சேவை), பி.எஸ்.ஜி. குடும்பத்தை சேர்ந்த ராஜ்ஸ்ரீ பதி (தொழில்துறை), டி.வி. தேவராஜன் (மருத்துவம்), ஆகியோருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது. 108 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகளை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரணாப் முகர்ஜி வழங்குவார்.

English summary
President Pranab Mukherjee on the eve of the 64th Republic Day has approved conferment of 108 Padma Awards. The list comprises of four Padma Vibhushan awards, 24 Padma Bhushan awards and 80 Padma Shri awards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X