For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓடியாடி வேலை பார்த்தால் மார்பகப் புற்றுநோய் வராது... ஆய்வில் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சுறுசுறுப்பாக ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய், குறிப்பாக பெண்களை அச்சுறுத்தும் மார்பகப்புற்றுநோய் வர வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக வீட்டு வேலைகளை செய்வதன் மூலம் எந்த பக்கவிளைவும் இன்றி ஆரோக்கியத்தை பெற்றுவிடலாம்

வாரத்தில் ஐந்து முறை வீதம், 30 நிமிடங்களுக்கு பிஸிக்கல் ஆக்டிவிட்டி மூலம் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும். ஒரே முறையில் 10 நிமிடங்கள் நீங்கள் அதைச் செய்யலாம். உங்களுடைய தினசரி அட்டவணையில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளவும்.

மார்பகப்புற்றுநோய் வராது

மார்பகப்புற்றுநோய் வராது

வீட்டு வேலை, நடைப்பயிற்சி, தோட்ட வேலை, உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பாக ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைகிறது என்கிறது, ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று.

அதிக வேலை ஆரோக்கியம்

அதிக வேலை ஆரோக்கியம்

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பெண்கள் ஆராயப்பட்டனர். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ள தொடர்பு அலசப்பட்டது.

அப்போது, வேலை குறைந்த வாழ்க்கை முறையை வாழ்பவர்களை விட, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் சற்றுக் குறைவு என்று தெரியவந்தது.

சுறுசுறுப்பாக இருங்களேன்

சுறுசுறுப்பாக இருங்களேன்

எப்போதும் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்யும் குடும்பப் பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 13 சதவீதம் குறைகிறதாம். எனவே குனிந்து, நிமிர்ந்து வேலை பார்ப்பது, குப்பை வாருவது, வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்வது என வாரத்தின் பெரும்பான்மையான நாட்களில் சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்கவும்.

மாடிப்படி ஏறுங்களேன்

மாடிப்படி ஏறுங்களேன்

கொஞ்சம்' வேலை செய்பவர்கள் அல்லது மிதமாக வேலை செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவீதம் குறைகிறதாம்.

லிப்ட் உபயோகிப்பதற்குப் பதிலாக மாடிப்படிகளை உபயோகிக்கலாம். பிரயாணம் செய்யும்போது வீட்டு வாசலில் இறங்குவதற்குப் பதிலாக ஒரு பஸ் நிறுத்தம் முன்பதாக இறங்கி வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் நடந்து போகலாம். செல்லப்பிராணியோடு அதிகாலையில் வாக்கிங் போகலாம், இதுபோன்ற நடவடிக்கைகளினால் மார்பகப்புற்றுநோய் வாய்ப்பு குறைவு என்கின்றனர் நிபுணர்கள்.

English summary
Just 30 minutes of moderate activity a day, five days a week, can have a positive effect on your health. And the more active you are, the more you can reduce your risk of cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X