For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூரிய ஒளியில் குளிங்க… இதயநோய், நீரிழிவு எட்டிப்பார்க்காது: ஆய்வில் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தினசரி 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தால் இதயநோய், நீரிழிவு போன்ற நோய்கள் எட்டிப்பார்க்காது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பு சூரிய ஒளி மீதான மரியாதையை அதிகரிக்க வைத்துள்ளது.

வெயிலுக்கு காட்டாமல் உடம்பை வளர்ப்பவர்கள் இன்றைக்கு நிறைய பேர் இருக்கின்றனர். வீட்டில் கதவு ஜன்னலை முடிவிட்டு ஏசியில் உட்கார்ந்திருப்பது, அதேபோல் அலுவலகத்திற்குச் சென்றும் ஏசியில் அமர்ந்து ஹாயாக வேலை செய்வது என சூரியனின் வருகைக்கே நோ சொல்லிவிடுவார்கள்.

சூரியனை கண்ணில் பார்க்காமல் இருப்பவர்கள் அடிக்கடி மருத்துவர்களை பார்க்க வேண்டியிருக்குமாம். அதே சமயம் தினசரி 20 நிமிடங்களாவது சூரியனுக்கு உடம்மை காட்டுபவர்களை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் எட்டிப்பார்க்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

வைட்டமின் டி இருக்கே

வைட்டமின் டி இருக்கே

சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் 'டி' மனிதர்களுக்கு 'டைப்1' நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று இங்கிலாந்தின் ஹார்டுவர்டு பள்ளியின் பொது சுகாதார பிரிவு விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

எனவே, இளமை காலத்தில் சூரிய ஒளியில் நன்றாக சுற்றி திரிய வேண்டும். அதனால் உடலில் வைட்டமின் 'டி' அதிகரிக்கும். இதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படுவது 50 சதவீதம் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

சருமத்திற்கு பொலிவு

சருமத்திற்கு பொலிவு

சூரிய ஒளியினால் உடலுக்கு பொலிவு ஏற்படுமாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தியாக உதவுகிறது. உணவு செரிமானத் தன்மையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துணை புரியும்.

ஆண்மை அதிகரிக்கும்

ஆண்மை அதிகரிக்கும்

மாலை இளம் வெயிலில் நடைபயணம் செய்வது ஆண்மை வீரியம் கிடைக்க உதவுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. காலை மாலை இளம் வெயிலின் மூலம் உடலில் சூரிய ஒளி படுவதால் புற ஊதாக் கதிர்கள் உடலில்படும். அது வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. ஆனால் உச்சி வெயில் உடம்புக்கு தீங்கு விளைவிக்கும்.

புற்றுநோய் வராது

புற்றுநோய் வராது

சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புபவர்கள் காலை, மாலை வெயிலில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary
Spending 20 minutes in the sun could help to lower your risk of heart disease, scientists have claimed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X