For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழை மரம், மாவிலைத் தோரணம், கும்மி: பஹ்ரைனில் களை கட்டிய பொங்கல்

By Siva
Google Oneindia Tamil News

பஹ்ரைன்: பஹ்ரைனில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.

பஹ்ரைனில் வசிக்கும் தமிழர்கள் கடந்த 18ம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். அங்குள்ள அல் பத்தாத் பூங்காவில் வாழை மரம் வைத்து, மாவிலைத் தோரணம் கட்டி பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியதும் அதை சூரிய பகவானுக்கு படைத்துவிட்டு அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

இந்த கொண்டாட்டத்தில் சுமார் 250 தமிழ் குடும்பங்கள் கலந்து கொண்டன. பெண்களும், குழந்தைகளும் கும்மிப்பாட்டுக்கு நடனம் ஆடினர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

கொண்டாட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தமிழ் கலாச்சாரப்படி வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. அன்றைய பொழுதை தமிழர்கள் இனிதாக கழித்தனர்.

English summary
Tamils in Bahrain celebrated Pongal on january 18 at Al Faddad garden. Around 250 families gathered, prepared sweet pongal there and had it after offering it to Sun god.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X