For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்மையான சந்தோஷம் எது? ஒரு சுவாரஸ்ய சர்வே

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கையில் காசு பணம், நல்ல வீடு, கார் , அருமையான வேலை ஆகியவைதான் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி தரும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இது எல்லாமே இருந்தாலும் கூட, படுக்கை அறையில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் அது உண்மையான மகிழ்ச்சியாக இருக்காது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

ஒவ்வொரு தம்பதிக்கும் முழுமையான, உண்மையான மகிழ்ச்சியைத் தருவது படுக்கை அறையில் அவர்களுக்குக் கிடைக்கும் திருப்திகரமான சந்தோஷமே என்பது இந்த ஆய்வின் தீர்ப்பாக உள்ளது.

இதுகுறித்த தகவலை கொலராடோ பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் டிம் வாட்ஸ்வர்த் வெளியிட்டுள்ளர். அவர் கூறியுள்ளதிலிருந்து சில:

அமெரிக்க சமூகத்தின் மன நிலை

அமெரிக்க சமூகத்தின் மன நிலை

1972 முதல் இப்போது வரையிலான அமெரிக்க சமூகத்தின் மன நிலை குறித்த ஆய்வை டிம் வாட்ஸ்வர்த் தலைமையிலான குழு தீவிரமாக ஆராய்ந்துள்ளது.

மொத்தம் 15,386 பேரிடம்

மொத்தம் 15,386 பேரிடம்

மொத்தம் 15,386 பேர் குறித்த குடும்ப வாழ்க்கை, அவர்களின் சந்தோஷத்திற்கான காரணிகள் குறித்த தகவல்களை டிம் ஆய்வு செய்துள்ளார்.

மிக மிக மகிழ்ச்சி முதல் சந்தோஷம் இல்லை வரை

மிக மிக மகிழ்ச்சி முதல் சந்தோஷம் இல்லை வரை

இந்த கருத்துக் கணிப்பிபன்போது மிக மிக மகிழ்ச்சி, மிகுந்த மகிழ்ச்சி, மகிழ்ச்சி இல்லை என்ற மூன்று விதமான பதில்கள் மட்டுமே பெறப்பட்டன.

எது சந்தோஷம்?

எது சந்தோஷம்?

வருமானம், திருமண பந்தத்தின் தற்போதைய நிலை, உடல் ஆரோக்கியம், வயது உள்ளிட்டவற்றை சுட்டிக் காட்டி அதன் அடிப்படையில் எது உண்மையான சந்தோஷம் என்பதை அறிய முயற்சித்துள்ளனர் இந்த கருத்துக் கணிப்பில்.

படுக்கையறை சந்தோஷமே உண்மையான சந்தோஷம்

படுக்கையறை சந்தோஷமே உண்மையான சந்தோஷம்

கருத்துக் கணிப்பில் கிடைத்த ஆச்சரியமான முடிவு என்னவென்றால் எல்லாவற்றையும் விட படுக்கை அறை உறவில் கிடைக்கும் திருப்திதான் உண்மையான சந்தோஷம் என்று கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனராம்.

33 சதவீதம் பேர்

33 சதவீதம் பேர்

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 33 சதவீதம் பேர், படுக்கை அறையில் தங்களுக்கு கிடைக்கும் திருப்தியே உண்மையான சந்தோஷம் என்று கூறியுள்ளனர். குறிப்பாக தங்களது நண்பர்களை விட தங்களுக்கு இதில் அதிக சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

44 சதவீதம் பேருக்கு

44 சதவீதம் பேருக்கு

வாரம் ஒரு முறை உறவு வைத்துக்கொள்வோரில் 44 சதவீதம் பேர் மற்றவர்களை விட தாங்கள் அதிக சந்தோஷத்துடன் இருப்பதாக கூறியுள்ளனர். அதேசமயம், வாரம் 2 முறை வைத்துக் கொள்வோரில் 55 சதவீதம் பேர் அதிக சந்தோஷத்துடன் இருப்பதாக கூறியுள்ளனர்.

மாதம் 2 அல்லது 3 முறை

மாதம் 2 அல்லது 3 முறை

மாதம் 2 அல்லது 3 முறை மட்டுமே உறவு கொள்வோருக்கு மகிழ்ச்சி குறைவாக இருப்பதும் தெரிய வந்ததாம். அதாவது மற்றவர்களை விட 14 சதவீத அளவுக்கு இவர்களிடம் மகிழ்ச்சி குறைவாக இருக்கிறதாம்.

உறவுகள் அன்பை அதிகரிக்கிறது

உறவுகள் அன்பை அதிகரிக்கிறது

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட அத்தனை பேருமே உறவுகள் அன்பை அதிகரிக்க உதவுவதாக ஒருமித்த குரலில் கூறியுள்ளனர்.

English summary
We all know people who aren’t happy unless they have a better house, car or job than the neighbours. Now it seems there’s another way to keep up with the Joneses – in the bedroom. Believing that they are having more sex than their neighbours is a crucial happiness factor for couples, says Tim Wadsworth, an associate professor of sociology at the University of Colorado Boulder
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X