• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவியை கவர கண்களால் காதல் கடிதம் எழுதுங்களேன்…

By Mayura Akilan
|

என்ன செய்தா இந்த பொண்ணுங்களை நம்ம வழிக்கு கொண்டுவரலாம் என்பதில்தான் ஆண்களுக்கு பயங்கர குழப்பம். சில பெண்கள் சாக்லேட் விரும்புவார்கள், சிலர் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் வைத்திருப்பார்கள். ஆனால் சிலர் என்ன செய்தாலும் வழிக்கு வரமாட்டார்கள்.

அன்பான கவனிப்பு, அக்கறையான பேச்சு, அவ்வப்போது ஆறுதலாய் சில முத்தம் என கொடுத்தால் சொக்கிப்போகும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். புரிதலோடு இருக்கும் துணைதான் என்றைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருகிறதாம்.

காதலியோ, மனைவியோ எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும், அவர்களை வழிக்கு கொண்டுவரவும் சில டிப்ஸ்களை அளித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

பெண்ணிற்கு பூ கொடுங்களேன்

பெண்ணிற்கு பூ கொடுங்களேன்

மல்லிகையோ, ரோஜாவோ மலருக்கு மயங்காத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பிறந்தநாள், திருமணநாள், முதல் முதலில் பார்த்த நாள், காதலை உணர்த்திய நாள் என அடிக்கடி பூக்கள் கொடுங்கள். மிகவும் எளிதான, மலிவான பரிசுதான். ஆனால் மனதைத் தொடும் பரிசு இது.

உன் பார்வையில் ஓராயிரம்

உன் பார்வையில் ஓராயிரம்

கணவனோ, காதலனோ தன்னை மட்டுமே பார்க்கவேண்டும், கவனிக்கவேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பம். பக்கத்தில் இருக்கும் போது தப்பித்தவறி கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்து விடாதீர்கள். அருகில் அமர்ந்திருக்கும் தருணங்களில் வார்த்தைகள் பேசுவதை விட கண்களால் பேசுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.

மனம் கவரும் மாலை

மனம் கவரும் மாலை

மழைக்காலத்தில் மாலை நேர தேநீர் எதிர் எதிரே அமர்ந்து டீ சாப்பிட்டுப் பாருங்களேன். அந்த ஒரு அற்புதத்தருணத்தில் உங்கள் துணையின் முகத்தில் புன்னகை பூக்கும்.

ஒரு நாள் சமைக்கலாமே?

ஒரு நாள் சமைக்கலாமே?

தினமும் மனைவி கையால் சாப்பிட்ட பழகிய ஆண்கள் ஞாயிறு ஒருநாளாவது தனது கையால் சமைத்து மனைவிக்கு பரிமாறலாம். அன்றைக்கு இரவு அதற்கான ரிசல்ட் தெரியுமாம்.

கவனிப்பு அவசியம்

கவனிப்பு அவசியம்

பரிசு கொடுப்பது... விலை உயர்ந்த ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று டின்னர் கொடுப்பது ஆகியவற்றைவிட உங்கள் மனைவியை எப்படி அக்கறையோடு கவனித்துக் கொள்கிறீர்கள் என்பதிலும் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது.

மனைவியின் நண்பர்கள்

மனைவியின் நண்பர்கள்

உங்களுடைய நண்பர்களுடன் பழகுவதைப் போல மனைவியின் நட்பு வட்டாரத்துடன் பழகிப்பாருங்களேன். நீங்கள்தான் மிகச்சிறந்த கணவராக இருப்பீர்கள்.

பாதுகாப்பா இருங்களேன்

பாதுகாப்பா இருங்களேன்

பெண்கள் எப்பவுமே ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது பாதுகாப்பு உணர்வுதான். பொது இடத்திலோ தனிமையிலோ ஆறுதலாய் தோள் கொடுங்கள்.

சின்னதாய் ஒரு கவிதை

சின்னதாய் ஒரு கவிதை

அவ்வப்போது கவிதையாய் பேசுங்கள். சில சமயம் மெயில் செய்யுங்கள். சொந்தமாக வராவிட்டாலும் காப்பியடித்தாவது கவிதை அனுப்பலாம் தப்பில்லை. குறிப்பாக ஊடல் தருணங்களில் இந்த கவிதைத் தூது நல்ல பலன் கொடுக்குமாம்.

அடிக்கடி பேசுங்களேன்

அடிக்கடி பேசுங்களேன்

செல்போனில் அடிக்கடி பேசுங்கள். முடியாவிட்டால் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புங்கள். சில நிமிடங்கள் பார்க்காமல் விட்டாலோ, எங்காவது வெளியூர் செல்ல நேர்ந்தாலோ ஐ மிஸ் யூ மெசேஜ் அனுப்புங்கள். காதல் மொழிகளால் இன்பாக்ஸ் நிறையட்டும்.

கை பிடித்துச் செல்லுங்களேன்

கை பிடித்துச் செல்லுங்களேன்

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் மனைவியின், காதலியின் கையை பிடித்துச் செல்லுங்கள். அதுபோன்ற பாதுகாப்பு உணர்வைத்தான் அவர் விரும்புகிறார். காலையில் எழுந்த உடன் அன்பான அணைப்பு, சின்னதாய் ஒரு முத்தம் என கொடுங்களேன். செல்ல விளையாட்டும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Do you want to know what the fastest way to a woman’s heart is? It is to make her smile. If you are really working on a relationship, or finding it hard to carry on, you may consider these tips to re-kindle the flame in your relationship. Take a look at the list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more