For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புது வீடு மாறப் போறீங்களா?: கொஞ்சம் படிச்சிட்டு போங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. ஒரே இடத்தில் வருடக்கணக்கில் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் ஊர் ஊராக டிரான்ஸ்பர் ஆகிறவர்களின் பாடுதான் பெரும்பாடாகிவிடும்.

வாடகைக்கு வீடு தேடுவதில் தொடங்கி, சாமான்களை பேக் செய்வது வரை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செட்டில் ஆவதற்குள் மூச்சு வாங்கிவிடும். இதோடு போற இடம் பாதுகாப்பானதுதானா? சுற்றுப்புறச்சூழல் செட் ஆகுமா என்றெல்லாம் பார்க்கவேண்டும்.

வாடகைக்கு வீடு பார்க்கப் போகும் போதே வீட்டில் எத்தனை பேர்?, குழந்தைகள் இருக்கிறார்களா? பெரியவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி வேறு கேட்டு படுத்தி எடுத்து விடுவார்கள். ( சென்னை போன்ற பெருநகரங்களில் பெரியவர்கள் இருந்தால் வீடு கொடுக்கவே யோசிக்கின்றனர். அப்போ அவர்களை அனாதை இல்லத்திலா விட முடியும்?)

ஒரு வழியாக வீடு கிடைத்து குடிபோகும் போது வீட்டில் உள்ள பொருட்களை பத்திரமாக கொண்டுபோய் சேர்ப்பதில் தொடங்கி, ஹவுஸ் ஒனரை காகா பிடிப்பது வரை பல வேலைகள் இருக்கின்றன. புதிதாக வீடு மாறுபவர்கள் மேற்கொண்டு படியுங்களேன்.

பொருட்கள் இடமாற்றம்

பொருட்கள் இடமாற்றம்

வீடு மாறப்போகிறோம் என்ற உடன் வீட்டில் உள்ள சாமான்களை எப்படி இடம் மாற்றுவது என்பதுதான் முதல் யோசனையாக இருக்கும். வேன் வைத்து எடுத்துச் செல்வதா? அல்லது பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் மூலம் எடுத்துச் செல்வதா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்

நகை, பணம், முக்கிய பத்திரங்கள்

நகை, பணம், முக்கிய பத்திரங்கள்

வீட்டில் உள்ள பெர்சனல் பொருட்களான, நகை, பணம், முக்கிய பைல்கள், பத்திரங்களை தனியாக பேக் செய்து நம்முடன் கையிலேயே கொண்டு செல்வதுதான் பாதுகாப்பானது. போக்குவரத்தில் மிஸ் ஆகிவிடுமோ என்று அஞ்சத் தேவையில்லை.

பேக் செய்வது எப்படி?

பேக் செய்வது எப்படி?

பொருட்களை பேக் செய்வது மிகப்பெரிய வேலை. தனியாக வேன் வைத்து எடுத்துச் சென்றால் நாம் பேக் செய்து, அதை ஆள் வைத்து வேனில் ஏற்றவேண்டும். இதே பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் என்றால் அவர்களே பேக் செய்து வேனில் எடுத்துக் கொண்டு போய் இறக்கிவிடுவார்கள். அவர்கள் ரூல்ஸ் என்ன வென்று தெளிவாக பேசிவிடுங்கள்.

புதிய கனெக்சன்கள்

புதிய கனெக்சன்கள்

புது வீடு மாறுவதில் மற்றொரு முக்கியமான சிக்கல், ரேசன் கார்டு தொடங்கி, கேஸ் கனெக்சன், கேபிள் கனெக்சன், டெலிபோன் கனெக்சன் என பல புதிய கனெக்சன்களுக்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். புது வீட்டிற்கு அருகில் உள்ள ரேசன் கடை, கேஸ் ஏஜென்சி போன்றவைகளை நெட் மூலம் விசாரித்து வைத்துக் கொள்வது அவசியம்.

முக்கிய அலுவலகங்கள்

முக்கிய அலுவலகங்கள்

புதிய வீடு உள்ள பகுதிகளில் உள்ள மின்சார அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் குடிநீர் வழங்கல் அலுவலகம், ஆகியவற்றின் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

பாதுகாப்பு முக்கியம்

பாதுகாப்பு முக்கியம்

புதிதாக போகும் வீடும் பாதுகாப்பானதுதான். ஏரியாவில் திருட்டு பயம் எதுவும் இருக்கிறதா? அடிக்கடி வெளியூர் போக நேர்ந்தால் தைரியமாக பூட்டிவிட்டு போகலாமா? என்று விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அட்ஜஸ்ட் செய்து வாழுங்கள்

அட்ஜஸ்ட் செய்து வாழுங்கள்

பழகிய இடத்தை விட்டுவிட்டு வருவது என்பது கொஞ்சம் கஷ்டமானதுதான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் வீடு மாறித்தான் ஆகவேண்டும் என்று வரும் பட்சத்தில் போகும் புதிய இடத்தில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும்.

அக்கம் பக்கம் நண்பர்கள்

அக்கம் பக்கம் நண்பர்கள்

வீடு மாறுவது சில சமயங்களில் உணர்வு ரீதியான சிரமத்தை ஏற்படுத்தும். அக்கம் பக்கம் வீட்டினர், பழகிய நண்பர்கள் என அனைவரையும் விட்டுவிட்டு வேறு இடம் போவது என்பது சிரமமானதுதான். பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிகம் பாதிப்பிற்குள்ளாவர்கள். என்ன செய்வது வீடு மாறியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில், புது வீட்டு முகவரியை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். கடிதங்கள், கூரியர் என எது வந்தாலும் வாங்கி உங்களுக்கு அனுப்ப வசதியாக இருக்கும். அதேபோல் போகும் புது இடத்தில் உங்கள் குழந்தைகளுக்கு புதிய நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்.

English summary
Shifting to a new home is always exciting and one of the biggest developments in our lives. However, this joy does not come alone but brings along the feeling of separation and anxiety with it. Undoubtedly, shifting to a new place is big thing to do. Many tips are useful, also necessary to follow to ensure safe and secure transfer. However, let us explore top 10 house shifting hassles that bother us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X