For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?: குவைத்தில் பட்டிமன்றம்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத் இஸ்லாமியச் சங்கம்(K-Tic) நடத்தும் சிறப்பு பட்டிமன்றம் வரும் மே மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது.

அறிஞர்களும், பேச்சாளர்களும் மட்டுமே பங்கேற்கும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு மாற்றமாக பொதுமக்கள் மட்டுமே பங்கேற்று தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வரும் மே மாதம் 17ம் தேதி "சிறப்பு பட்டிமன்றம்" நிகழ்ச்சியை குவைத்தில் முதல் முறையாக நடத்துகிறது.

வெளிநாட்டு வாழ்க்கையில் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது.

இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல்,
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,
ஃகைத்தான், குவைத்.

பட்டிமன்றத்தில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்:

குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு கிடையாது.
பெயர் மற்றும் தலைப்பு போன்றவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19 மற்றும் 26 மற்றும் மே 3 மற்றும் 10) நடைபெறும் பட்டிமன்ற பயிலரங்கில் கலந்து கொள்ள வேண்டும்.
5 முதல் 8 நிமிடங்கள் வரை உரையாற்றலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பட்டிமன்றத்தில் உரையாற்ற அனுமதி வழங்கப்படும். சிறுமிகளுக்கு விதிவிலக்கு உண்டு.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
முன்பதிவு செய்யுமிடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்.
முன்பதிவு செய்ய கடைசி நாள் : 03.05.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆ வரை

குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த அரிய வாய்ப்பை குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

English summary
K-Tic has arranged for a special pattimandram titled Velinaatil Vaazhvathaal Petrathu Athigama? Ilanthathu Athigama? on may 17. Those who want to participate in this programme should register their names before 3.5.2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X