For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபீஸுக்கு நடந்து போனால் ஷுகர் உங்க பக்கமே வராதாம்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வேலை பார்க்கும் அலுவலகங்களுக்கு நடந்து செல்வோருக்கு சர்க்கரை வியாதி ஏற்படும் வாய்ப்பு 40 சதவீதம் குறைவு என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மற்றும் யூனிவர்சிட்டி கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடல் நலம் பற்றி ஒரு ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வில் இங்கிலாந்தில் உள்ள 20,000 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தினர்.

அவர்களின் ஆய்வு முடிவு அமெரிக்கன் ஜர்னல் ஆப் ப்ரிவென்டிவ் மெடிசினில் வெளிவந்துள்ளது.

உடல் பருமன்

உடல் பருமன்

அலுவலகத்திற்கு கார், பைக் அல்லது டாக்சியில் செல்பவர்களுடன் ஒப்பிடுகையில் சைக்கிள், பொது போக்குவரத்து மூலம் செல்பவர்கள் அல்லது நடந்து செல்வர்களுக்கு உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாக்கிங்

வாக்கிங்

கார், பைக்கில் செல்பவர்களுடன் ஒப்பிடுகையில் அலுவலகத்திற்கு நடந்து செல்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவாம்.

சைக்கிள்

சைக்கிள்

அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்பவர்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்படும் வாய்ப்பு மிக மிக குறைவாகும்.

இதயம்

இதயம்

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, உடல் பருமன் ஆகியவற்றால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி செய்யுங்களேன்.

English summary
According to a new study, walking to work could keep diabetes at bay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X