For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடை குறைப்பு ஆபரேசன் பண்ண போறீங்களா? இதை படிச்சிட்டு போங்களேன்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

எடையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைகளால் கல்லீரல் வீங்கி அந்தப் பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்று ஒரு ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பெல்லாம் கூடுதல் எடை உள்ளவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து தேவையில்லாத கொழுப்பை நீக்கி ஒல்லியாக மாறுவார்கள். ஆனால் இந்த அறுவைச் சிகிச்சையானது வேறு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜெர்மனியின் டிரஸ்டென் மருத்துவமனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

எடை குறையும் ஆனால்

எடை குறையும் ஆனால்

எடைக் குறைப்புக்காக மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சையால் கல்லீரல் வீங்கி விடும் என்கிறது இந்த ஆய்வு.

டைப் டூ சர்க்கரை வியாதி குறையும்

டைப் டூ சர்க்கரை வியாதி குறையும்

அதேசமயம், எடைக்குறைப்பு அறுவைச் சிகிச்சையால் டைப் டூ சர்க்கரை வியாதி உருவாவது குறையும் என்று முன்பு கூறப்பட்டது.

சாதாரண மற்றும் குண்டு மனிதர்களிடமிருந்து

சாதாரண மற்றும் குண்டு மனிதர்களிடமிருந்து

இந்த ஆய்வுக்காக சாதாரண மற்றும் உடல் பருமன் கொண்ட நபர்களிடமிருந்து கல்லீரல் ஆய்வுக்காக பரிசோதிக்கப்பட்டது.

டிஎன்ஏவும் மாறிப் போகும்

டிஎன்ஏவும் மாறிப் போகும்

இந்த எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையால் பலருக்கு டிஎன்ஏவிலும் கூட மாற்றம் ஏற்படுகிறதாம்.

நான் ஆல்கஹாலிக் பேட்டி லிவர் நோய்

நான் ஆல்கஹாலிக் பேட்டி லிவர் நோய்

எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்வோருக்கு நான் ஆல்கஹாலிக் பேட்டி லிவர் நோய் (NAFLD)என்ற நோய் வருகிறதாம்.

மூன்றில் ஒரு அமெரிக்கருக்கு

மூன்றில் ஒரு அமெரிக்கருக்கு

இந்த வகையான கல்லீரல் நோய் மூன்றில் ஒரு அமெரிக்கருக்கு வருகிறதாம். மேலும் உலக அளவிலும் இது அதிகரித்தவண்ணம் உள்ளதாம்.

27 பேரிடம் ஆய்வு

27 பேரிடம் ஆய்வு

இந்த ஆய்வுக்காக 27 பேர் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு கல்லீரல் நோய்இருந்தது. அதேபோல உடல் பருமன் கொண்ட அதேசமயம் ஆரோக்கியமான 18 பேர் மற்றும் சாதாரண எடை கொண்ட 18 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

மீத்தைலேஷன்

மீத்தைலேஷன்

இந்த ஆய்வின்போது உடல் எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மீத்தைலேஷன் என்ற டிஎன்ஏவில் உள்ள வேதிப் பொருள் மாற்றப் பிரச்சினை ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இப்படி மாற்றம் ஏற்பட்டவர்களுக்குத்தான் கல்லீரல் நோய் ஏற்படுவதும் தெரிய வந்தது.

English summary
Researchers have found that weight loss surgery can reverse the symptoms of fatty liver disease. Earlier research has found that the surgery not only benefits obese people to shed their extra pounds, it also causes early remission of type 2 diabetes. The findings are derived from research on liver samples in normal and obese patients-some with fatty liver disease and some without fatty liver disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X