For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலப்போக்கில் அர்த்தம் மாறிய வார்த்தைகள்....

Google Oneindia Tamil News

சென்னை: தொழிற்நுட்பம் நம் வாழ்க்கைச் சூழலையே மாற்றிவிட்ட காலக் கட்டத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம். வாழ்க்கை ஓட்டம் மாறியது போலவே சில வார்த்தைகளின் அர்த்தங்களும் காலப்போக்கில் மாறி வருகிறது.

உண்மையான முகத்தை மறந்து, போலியான முகமூடியோடு வலம் வரும் சில மனிதர்களைப் போல வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் தற்போது உருமாறி விட்டன.

இதனை கிரகித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கும் இளைய தலைமுறையால் எதிர்காலத்தில் இலக்கணமே மாறும் சூழ்நிலை கூட ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இதோ உதாரணத்திற்கு சில வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு...

ஆப்பிளை சாப்பிட முடியாது....

ஆப்பிளை சாப்பிட முடியாது....

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நோய் உங்களை அணுகாது என்று டாக்டர்கள் கூறிய நிஜ ஆப்பிள் மறந்து, ஆப்பிள் என்றதும் பெரும்பாலானவர்களின் நினைவில் வருவது ‘ஆப்பிள் போன்' தான்.

எலி வலைக்குள் நாம்...

எலி வலைக்குள் நாம்...

இந்த எலித்தொல்லை தாங்களப்பா... என்று எலி பிடிக்க ஓடிய நாட்கள் போய், எலியை அதாங்க மவுஸின் முதுகில் கை வைத்து உலகத்தையே வலம் வருகிறோம் இன்று.

அது பழம் இல்லைங்க...

அது பழம் இல்லைங்க...

உங்களில் எத்தனைப் பேருக்கு பிளாக் பெரி என்று ஒரு பழம் இருப்பது தெரியும். பிளாக்பெரி என்றதும் கண்ணுக்கு முன்னால் நிழலாடுவது ஒரு போன் தானே...

மொபைல் பேங்க்.. ஹாஸ்பிடல்...

மொபைல் பேங்க்.. ஹாஸ்பிடல்...

மொபைல் என்றால் நகர்வது என்பதைக் குறிக்கும். இன்று ஆறாம்விரலாய் மாறிவிட்ட செல்போன்களை நாம் மொபைல் என்று தானே செல்லப்பெயரிட்டு அழைக்கிறோம்.

கொசு வலையா... மீன் வலையா

கொசு வலையா... மீன் வலையா

வலை என்றால் எதையாவது பிடிக்கும் பொருள் என்ற பொருள் மாறி, வலை அதாங்க நெட் இன்று நம்மை பிடித்து ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது.

மாத்திரை போட்டாச்சா...

மாத்திரை போட்டாச்சா...

முன்பெல்லாம் டாக்டர் எழுதிக் கொடுத்த டேப்லெட் போட்டால் நோய் சரியாகும். தற்போது டேப்லெட் இல்லையென்றால் தான் சிலருக்கு மன நோயே பிடிக்கும். அந்தளவுக்கு ‘டார்லிங்' ஆகிவிட்டது டேப்லெட்.

காதல் வைரஸ்...

காதல் வைரஸ்...

மனிதர்களைத் தாக்கும் வைரஸ் மாதிரி, இன்று கம்யூட்டர்களைஅழிக்கும் வைரஸும் பெருத்து விட்டது. ஆண்டி வைரஸ் கொடுத்து கம்யூட்டரின் உடல் நிலையை சரி செய்ய வேண்டியுள்ளது.

ஜன்னலுக்கு வெளியே...

ஜன்னலுக்கு வெளியே...

குளிர்ந்த காற்றும். ஒளியும் வேண்டி ஜன்னலைத் திறந்த நாட்கள் மாறி, இன்று நாம் கம்யூட்டரின் ஜன்னலை அதாவது விண்டோவை திறந்து மூடுகிறோம். என்ன இந்த கம்யூட்டர் விண்டோவைத் திறந்தால் கரை புரண்டோடும் தகவல்கள்.

English summary
Technology has not changed our lives, but also words and their meaning. In the virtual world, earthy’ words get morphed to mean something else. Here is a look at the good old words and their virtual cousins who are more popular.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X