For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேசுவரர் கோவிலில் புத்தாண்டு வழிபாடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பேர்ன்: சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்னில் உள்ள ஞானலிங்கேசுவரர் திருக்கோவிலில் புத்தாண்டு பிறந்த நாளான நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து காலையில் ஞானலிங்கேசுவரரை பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி தெய்வீக பாடல்கள் பாடி வழிபட்டனர். சிவாயநம எனும் திருஐந்தெழுத்து மந்திரம் முழங்க பக்தர்கள் ஞானலிங்கேசுவரரை வழிபட்டனர்.

புத்தாண்டு பிறப்பன்று கோவில்களில் சென்று இறைவனை வழிபடு மரபு. அனைத்து மதத்தினரும் அவரவர் தெய்வங்களை வணங்குகின்றனர். சுவிட்சர்லாந்தில் உள்ள இந்துக்கள் ஞானலிங்கேசுவரர் ஆலயத்தில் புத்தாண்டினை கொண்டாடினர்.

2016 New year prayer at Gnanalingeswars temple in Swiss

"ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே
கோளு நாளவை போயறுங் குற்றமில்லார்களே" திரு ஞான சம்பந்தர்.

ஞானலிங்கேச்சுரத்தில் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு நாளும் கோளும் நன்மை செய்யுமே...

" சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பர் இங்கு யாவரும் இல்லை .............. திருமந்திரம் த,வே, 10

அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை " திருமந்திரம்

பிறப்பும் இறப்பும் முதலும் முடிவும் இல்லாதவர் சிவபெருமானார் ஒருவரே ஆவார். இவரைத்தான் பெருந்தெய்வம் என்றும், முழுமுதற் பொருள் என்றும் கூறுகிறோம். இவரை வழிபட்டால் ஒன்பது கோளும் நம்மை ஒன்றும் செய்யாது. நன்மைகளை மட்டுமே செய்யும் என்று சொல்கிறார் மூன்று வயதில் ஞானாம்பிகையிடம் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞானசம்பந்தர்

" ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே" ............ ஞானசம்பந்தர் கோளாரு பதிகம்

சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி , இராகு,கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் சிவபெருமானாரை வணங்குபவர்கட்கு நன்மைகளைச் செய்யும் என்பது கடவுளை கண்ட சம்பந்த சுவாமிகள் திருவாக்கு ஆகும்.

இவ்வாக்கிற்கமைய பொதுப்புத்தாண்டு 2016 பிறந்த 31. 12. 2015 வியாழக்கிழமை நள்ளிரவு 00.00 மணிக்கு சிறப்பு வழிபாடு சுவிற்சர்லாந்தின் தலைறநகர் பேர்னில் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரரிற்கு நடைபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 01. 01. 2016 வெள்ளிக்கிழமை பல ஆயிரம் அடியார்கள் என்றுகூடி தெய்வத் தமிழ்ப் பாட்டினால் பணிந்து, ஞானலிங்கப்பெருமானை ஏத்தி தொழுது, ஞானாம்பிகை0 வல்ல வினை ஓல்லை ஒழித்து வழிபாட்டில் திளைத்தனர்.

"இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையினால் முடிந்தது"
எனும் திருமந்திரப் பொருள் உணர ஞானலிங்கேச்சுரத்தில் சிறப்பு அருளமுதோடு நற்தமிழ் வழிபாடுகண்டு வியந்த அடியார்கள், தாம் ஏற்கனவே செய்துள்ள புண்ணியத்தால் இப்பொழுது தமிழ் வழிபாட்டு இன்பங்களை அனுபவித்து வருகின்றோம் என்று மெய் சிலிர்த்தனர்.
வானில் ஞானலிங்கேச்சுரத்து அடியார்கள் அரசாழ்வார் சம்பந்தரின் கட்டளையும் ஒலிப்பதாக அரோகரா சுவிஸ் நாட்டில் ஒலித்தது. சிவாயநம எனும் திருஐந்தெழுத்து மந்திர விண்முட்ட ஞானலிங்கேச்சுரத்தில் ஒலித்து 2016ம் ஆண்டு புதிதாகத் தொடங்கிற்று. நலமாக வாழலாம் என ஞானசம்பந்தர் சொல்வது போல் நெஞ்சம் உணர்ந்தது.

English summary
Devotees prayer 2016 new year at Bern Gnanalingeswarar temple in Swizerland.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X